பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கண்ல 27 பிரெஞ்சு மொழியில் Recueil defleurs என்றும் பொருள் விளக்கம் கூறுகின்றனர். இந்த இரண்டுக்கும் மலர்ச் சேர்க்கைமலர்த்திரட்டு என்றே பொருளாகும். (Recuiel de fleurs = Collection of flowers). lbgvfi j Gæti & gos என்பது மலர்மாலை - பூமாலை என்பதேயன்றோ? அடுத்த அவதாரம்: ம்லர்ம்ாலை என்னும் பொருளைக் குறித்து வந்த் "ஆந்தொலொழியா’ என்னும் கிரீக் சொல், நாளன்டைவில் மற்றோர் அவதாரம் (பிறவி) எடுக்கத் தொடங்கியது; அதோ வது, - பூக்களின் தொகுப்பாகிய "பூமாலை' என்னும் பொரு ளைக் குறித்தது போல, பாக்களின் தொகுப்பாகிய பாமால்ை’ என்னும் பொருளையும் குறிக்கலாயிற்று: அஃதாவது, - பல் வேறு பாடல்களின் தொகுப்பாகிய 'தொகை நூல் என்னும் பொருளையும்.தருவதாயிற்று. பூக்களின் தொகுப்பைக் குறிக் கும் "ஆந்தொலொழியா என்னும் சொல், அதுபோன்றதொரு தொகுப்பாகிய - அஃதாவது - பாக்களின் தொகுப்பாகிய தொகை நூலையும் குறிப்பதற்குத் தமிழ் மொழியிலிருந்து சில ஒப்புமைகள் வருமாறு:- -- சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று சரக்குகள் கொண்டதொரு மருந்தைக் குறிக்கும் 'திரிகடுகம் என்னும் பெயர், மும்மூன்று கருத்துகள் கொண்ட பாடல்கள் அடங்கிய 'திரிகடுகம்' என்னும் நூலையும் குறிக்கிறது. ஐந்து சிறு வேர் களாலானதொரு மருந்தைக் குறிக்கும் சிறுபஞ்ச மூலம்’ என் னும் பெயர், ஐந்து ஐந்து கருத்துக்கள் அடங்கிய பாடல்களைக் கொண்ட சிறுபஞ்ச மூலம் என்னும் நூலையும் குறிக்கிறது. நான்கு மணிகளால் (இரத்தினங்களால்) গুণ, தொருவகை அணிகலனைக் குறிக்கும் நான்மணிக் கடிகை என்னும் பெயர், நான்கு நான்கு கருத்துக்கள் அடங்கிய பாடல்கன்ள உடைய "நான்மணிக் கடிகை' என்னும் நூலுக்கும் பெயராயிருக்கிறது. மலர்களின் தொகுப்பைக் குறிக்கும் மாலை என்னும் பெயர், 'திருவள்ளுவ மாலை', 'ஆசிரிய மாலை', 'கார்வண்ண மாலை' முதலியனவாகப் பாடல்கள் பலவற்றின் தொகுப்புக்களாகிய நூல்களைக் குறிக்கலாயிற்று. இவ்வாறே, ஆந்தொலொழியா