பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 17 பாடல் தொகுப்புப் பணி: பாடற்கலையின் மாபெரும் பயன்களையும், பாவலர்களின் மாண்பினையும் பட்டறிந்த மக்கள், பாவலர்களைப் பொன் னைப்போல் போற்றினர்; அவர்தம் பாடல்களைப் படித்துத் துய்த்துப் பயன்பெற்று மகிழ்ந்தனர்; பாடல் நூல்களாகிய இலக்கியங்களைப் பெறற்கரிய மணிகள் நிறைந்த பேழைகளா கப் பேணிக்காத்து வந்தனர். பாடல்களை முழுநூல் வடிவத்தில் பெற்றுப் படித்துப் பயன் நுகர்ந்த அறிவாளிகள் சிலர், பலப்பல பாடல்கள் ஒரு நூல் உருவத்தில் இல்லாமல், தனித்தனி உதிரிப்பாடல்களாகச் சிதறிக் கிடப்பதை அறிந்தனர். சுவைகண்ட பூனை விடுமா? ஐயோ-இந்த உதிரிப்பாடல்களை இப்படியே தனித்தனியாகச் சிதறிய நிலையில் விட்டுவைத்திருந்தால் நாளடைவில் ஒவ் வொன்றாக மறைந்து போகுமே என்றஞ்சி, அவற்றை ஒன்று திரட்டித் தொகுத்து, ஒவ்வொரு நூல் வடிவம் கொடுக்கத் தொடங்கினர். இவ்வாறாகப் பல உதிரிப் பாடல்கள் ஒன்று சேர்ந்த தொகுப்பு நூல்கள் உருவாகத் தொடங்கின. இவை நாளடைவில்தொகை நூல்கள்’ என்னும் அழகிய பெயர் பெற்றன. ஒன்று ஒன்றாகவா? ஒரே மாட்டாகவா? 'ஒன்று ஒன்றா நூறா? ஒரே மட்டா நூறா?' என்பது ஒரு பழமொழி. ஒரேயடியாகச் சேர்ந்த பின்னரே நூறு தேற முடியும், ஈண்டு, தொகை நூல்கள் முந்தியவையா? முழுமுழுத் தனி நூல்கள் முந்தியவையா ?-என்றதோர் ஐயம் எழுகிறது. 'சிலப்பதிகாரம்? என்னும் நூல் ஒருவரே ஒரே பொருள் பற்றிய எழுதிய ஒரு முழுத் தனிநூல். புறநானூறு என்னும் நூல், பலர் பலகாலத்தில் பலபொருள் பற்றி எழுதிய பல்வேறு பாடல்களின் - அஃதாவது நானுாறு உதிரிப் பாடல்களின் தொகுப்பு நூல் - தொகை நூல் ஆகும். புறநானூறு போன்ற தொகை நூற் பாடல்கள் முதவில் தோன்றியிருக்க முடியுமா? சிலப்பதிகாரம் போன்ற முழுத் தனிநூல் முதலில் தோன்றி யிருக்க முடியுமா? இந்தக் கேள்வியையே இன்னொரு விதமாக