பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 23 வரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும் அடித்துக் கொள் வதும் அழித்துக் கொள்வதுமாகப் போர் ஊக்கம் செயல்பட விடக்கூடாது. இதற்குப் பதிலாக, வறுமை, பிணி, அறியாமை, மூடப்பழக்க வழக்கம் முதலியவற்றை எதிர்த்துப் ப்ோராடி, வெற்றி பெறுவதிலும், நில நடுக்கம் - எரிமலை-புயல்-வெள்ளம் முதலிய இயற்கையின் கொடுமைகளோடு போராடிக் காத்துக் கொள்வதிலும், இன்ன பிறநல்வழிகளிலும் போர் ஊக்கத்தைப் பயன் படுத்தவேண்டும். இவ்வாறு ஒர் ஊக்கத்தை அதன் போக்கில் விட்டு விடாமல் நல்வழிகளில் திருப்பி'ஒழுங்கு செய் வதற்குத் தூய்மை செய்தல் (Subimation) என்று உள நூலார் பெயர் தந்துள்ளனர். இந்த அடிப்படையுடன் திரட்டுக்கத்திற்கு வருவோம்.-பல் வேறு பொருள்களையும் நிரம்பத்திரட்டித் தொகுத்துச் சேர்த்து வைப்பது மக்கள் இயல்பு. ஆனால், தேவைக்கு மேல் வீடுகள் நிலங்கள், ஆடையணிகலன்கள், காசு பணங்கள் முதலிய வற்றைத் திரட்டுவதில் ஊக்கங்காட்டி, வீண் அவாவால், மற்ற மக்களை இல்லாதவர்களாக்கித் துன்புறுத்துவதில் திரட்டுக் கம் செயல்பட விடக்கூடாது. சிறந்த பாடல்களைத் தொகுத் தல், நல்ல நூல்களைத் திரட்டுதல், மற்றவர்க்கும் பயன் படுத்தும் நோக்குடன் இன்றியமையாப் பொருள்கிளைச் சேர்த்து வைத்தல் முதலிய நல்வழிகளில் திரட்டுக்கத்தைத் திருப்பிப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்த அறிவுடைமையா 色LD。 எனவே, பழைய உதிரிப் பாடல்களை ஒரு நூலாகத் தொகுத்து வைத்தவர்களும், பல நல்ல நூல்களைத் திரட்டி வைத்தவர்களும், திரட்டுக்கத்தை நன்முறையில் பயன் படுத்திய பேரறிஞர்கள் அல்லவா? யார் யாரோ எதை எதையோ தொகுத்துத் திரட்டிக் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்க், இந்தப் பெருமக்கள் பெறலரும் பாடல்களையும் நூல்களை யும் திரட்டி வைத்திருப்பதை நோக்குங்கால், இவர்தமை எவ் வளவு புகழ்ந்தாலும் தகுமே! இந்தத் தொகுப்புக்களால் - இந்தத் திரட்டுக்களால் மக்கள்குலம் பெற்று வரும் பயன்கள் மிகப் பலவன்றோ? இவர்தம் புகழ் வாழ்க! -