பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 71 நூலின் தொகுப்பாசிரியர் தமது முன்னுரையில் குறிப்புக் காட்டியுள்ளார். மேலும், ஆசிரியர் முன்னுரையில் கூறியிருப். பதாவ்து:- "இந்த நூல் இருமுனைப் பயன்கள் அளிக்கவல்லது. ஒன்று:இதனைப் பாடநூலாகவும், பயன்படுத்தலாம். இதனைப் படிப்பவர்கள், புத்துலகப் பாடல்கள்-புதுப்பாணி பாடல் இலக்கியங்கள் வளர்ந்துவரும். வரலாற்று அமைப்பினைச் சிறப்பாக உணர்ந்து கொள்ளலாம். அஃதாவது- பத்த்ொன்ப தாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டி லும் இயற்றப்பெற்ற பாடல்களின் இயல்பினைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம். இரண்டாவது: இதனை எல்லாருமே இலக்கிய இன்பத்திற்காகப் படிக்கலாம். இலக்கியம் படிப்பதன் இன்றியமையாத பயன் சுவைத்து இன்புறுதலாகும்' - இந்தக், கருத்துப்படத் தொகுப்பாசிரியர் கூறிச் செல்கிறார். மற்றும், ஆசிரியர் இருபத்திர்ண்டு பக்கம் கொண்ட் தமது நீளமான முகவுரையில், Modern என்னும் சொல்லுக்கு மிக விரிவான விளக்கமும், பாடல் - இலக்கியம்-புலவர் தொகை நூல் முதலிய பொருள்கள்பற்றி விரிவான விளக்கமும், பழைய தொகை நூல்கள்-பிற நாடுகளில் உள்ள அமைப்பு முறை முதலியவைபற்றி விளக்கமும் கொடுத்துக்கொண்டு செல்கிறார். இந்த நூலில், பாவலர்கள் நாற்பதின்மர் (40 பேர் ) இயற்றிய நூற்றாறு (106) பாடல்கள். தொகுக்கப்பட்டுள்ளன. முதல் பாடல், ஜெரார்டு மேன்லி ஃஒப்கின்ஸ் (Gerard Man. ley Hopkins) arcăruguiñor ‘The Candle Indoors' as ongo) in பாடலாகும். இறுதிப் பாடல் யீட்ஸ் (W.B.Yeats) என்பவரின் “A Prayer for Old Age' arcărgyth ur-outróth. 5:i9a/TCŞ. பாடலின் தொடக்கத்திலும் முதலில் ஆசிரியர் பெயரும் அடுத்துப் பாடல் தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஆசிரியர் வாரியாகவோ-காலவாரியாகவோதலைப்பு வாரியாகவோ வேறு எந்த வகையாகவோ இனப் படுத்தி-வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாதது இந்நூலில் உள்ள ஒரு புது முறையாகும். நூற்றாறு பாடல்களும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்று அமைந்து தொடர்கின்றன. ஆனால், 'பாடல்கள் ஒன்றொடொன்று ஒரு சிறிதளவாவது கருத்துத்