பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 301 பெருங்குன்றுார் கிழார் பாடியது. ஆட்சிக்காலம்: பதினா றாண்டு, - பாடப்பட்டோர் அனைவரும் சேர மன்னர்களே, இவர் களை இந்தப் புலவர்கள் பாடி, நம்ப முடியாமல் வியக்கத் தகுந்தவாறு மிகப் பெரிய அளவில் பரிசு பெற்றுள்ளார்கள். தலைமைப் புலவர்களாகிய கபிலரும் பரணரும் பதிற்றுப் பத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பதிற்றுப் பத்தில் இடம் பெற்றுள்ள சேர மன்னர்கள் சேர நாட்டிலேயே வெவ்வேறிடங்களில் முன் பின்னான காலங் களில் அரசாண்டவர்கள். இவர்கள் உதியன் மரபினர் எனவும், இரும்பொறை மரபினர் எனவும் இரு வகையர், இவ்விரு வகையினரும் தாயத்தினர் - பங்காளி முறையினர். மேலே குறிப்பிட்டுள்ள எண்மருள் முதல் ஐவரும் உதியன் மரபினர்; இறுதி மூவரும் இரும்பொறை மரபினர். உதியஞ் சேரலின் மக்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆகிய இருவராவர். இவர்களுள் முன்ன வன் இரண்டாம் பத்திலும், பின்னவன் மூன்றாம் பத்திலும் பாடப்பட்டுள்ளனர். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு வேளாவிக் கோமான் மகள் வயிற்றில் பிறந்த களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் நான்காம் பத்திலும், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்திலுமாகப் பாடப்பட்டுள்ள னர். அதே இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளி மகள் வயிற்றில் பிறந்த கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐந்தாம் பத்தில் பாடப் பெற்றுள்ளான்; சிலப் பதிகாரத்தில் வரும் சேரன் செங்குட்டுவன் இவனே. சிலப்பதி கார ஆசிரியர் இளங்கோவடிகள் மணக்கிள்ளி மகள் வயிற் றில் பிறந்த இளவலாயிருக்க வேண்டும். இதுகாறுங் கூறப் பட்ட ஐந்து பத்தின் தலைவர்களாகிய ஐவரும், அண்ணன்தம்பியரும், அப்பன்-பிள்ளையுமான உறவு முறை உடையவர் என்பது புலனாகும், அடுத்து,-அந்தவஞ் சேரல் இரும் பொறையின் மகனான செல்வக்கடுங்கோ வாழியாதன் ஏழாம் பத்திற்கு உரியவன் ஆவான், இந்தச் செல்வக் கடுங்கோவின் மைந்தனாகிய தகடூர்