பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தமிழ் நூல் தொகுப்புக் கலை 'அவற்றுள், வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரப் பொருபோர் உறுமுறை தொடங்கிய வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆதக் தோம்பலும் அங்கிரை மீட்டலும் என இரு பாற்றே அஃதென மொழிப, (4) "உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுதல் அரணம் கூற்றலும் காத்தலும் என இரு வகையது அதுவென மொழிப.' (9) என்னும் நூற்பாக்களால் அறியலாம். மற்றும், மண்டமர்க் கிவர்ந்தோன்’ என்று தொடங்கும் (5) நூற்பாவில், வெட்சிக்கு உரிய துறைகளையும், நிரைகோட் கேட்ட' என்று தொடங் கும் (6) நூற்பாவில் கரந்தைக்கு உரிய துறைகளையும், 'முடி மிசை உழிஞை சூடி என்று தொடங்கும் (10) நூற்பாவில் உழிஞைக்கு உரிய துறைகளையும், ஏப்புழை ஞாயில் என்று தொடங்கும் (11) நூற்பாவில் நொச்சிக்கு உரிய துறைகளை யும் தனித்தனியே கூறியுள்ளார். இவ்வாறாகப் பன்னிரு படலத்தின் பகுப்புக்களைத் தாமும் ஏற்றுக் கொண்டுள்ளார் இலக்கண விளக்கமுடையார். இது மட்டுமா? பன்னிரு படலத் தில் பொதுவியல் படலம் என்னும் பெயரில் உள்ளதை இவர் ஒழிபு-பொது என்னும் பெயரில் தனியாகக்குறிப்பிட்டு, அதற்கு உரியனவாக, தொல்காப்பியத்திலுள்ள பல துறைகளையும் எடுத்துத் தொகுத்துக் கூறியுள்ளார். இதனை, ‘சாற்றாது ஒழிந்தவும் சாற்றிய திணைவயின் ஏற்றன பொதுவும் என இரு திறனும் ஒதிய புறப்பொருள் ஒழிபெனப் படுமே.” என்னும் (20) நூற்பாவாலும், வேந்திடை தெரிதல்' (2l) என்று தொடங்கும் 89 அடிகள் கொண்ட நீளமான நூற்பாவா லும் அறியலாம். மேலும் இவர், தமது நூலுக்குத் தாமே எழு திய உரையில், மேற்கோள்களாகப் பன்னிரு படலத்தின் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுள்களை மிகுதியாக எடுத்துக் காட்டியிருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. சுருங்கச் சொல்லின், இலக்கண விளக்க ஆசிரியர்