பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தமிழ் நூல் தொகுப்புக் கலை ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என நான்கு வகையாகும். ஆசிரிய நடையையுடையது வஞ்சியாதலின் அதனை ஆசிரியத்துள் அடக்கலாம். வெண்பா நடையுடையது கலியாதலின் அதனை வெண்பாவுள் அடக்கலாம். இந்தக் கருத் துக்களைத் தொல்காப்பியம் செய்யுளியலில் உள்ள "ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்பு பாவகை விரியே., (101) 'பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு :ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப" (103) 'ஆசிரிய கடைத்தே வஞ்சி ஏனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. (104) என்னும் நூற்பாக்களால் தெளிவாக அறியலாம். இந்தப் பாக்களைச் சார்ந்து மருட்பா, பரிபாடல் (பரிபாட்டு) போன் றவை வரும். யாப்பருங்கலம் முதலிய நூல்கள் கடைச்சங்க காலத் திற்குப் பிற்பட்டவை யாதலானும், கடைச்சங்கப் புலவர் ளுக்குத் தொல்காப்பியமே இலக்கண நூலாய் இருந்தமை யானும், கடைச்சங்க நூல்களாகிய எட்டுத்தொகை நூல் ளின் வரிசையமைப்பைத் தொல்காப்பியத்தை ஒட்டியே நாம் ஆராயவேண்டும். எட்டுத்தொகை நூல்களுள், ஆசிரியப்பாவால் ஆறும், கலிப்பாவால் ஒன்றும், பரிபாடலால் ஒன்றும் ஆக்கப் பட்டுள்ளன. எனவே, ஆசிரியப்பாவால் ஆன ஆறு நூல்களை யும் முதலிலும், கலியை ஏழாவதாகவும், பரிபாடலை எட்டாவ தாகவும் இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் வரிசைப் படுத்தியிருப்பது முறைதானே! கலி, பரிபாடல் இரண்டனுள் கலி நால்வகைத் தலைமைப்பாக்களுள் ஒன்றாதலானும், பரிபாடல் துணைப் பா ஆதலாலும், பரிபாடலுக்கு முன் கலியை அமைத்தது பொருத்தமே. தொல்காப்பியர் அகத் திணையியலில், இவ்விருபாக்களுக்குள், "கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர், (56)