பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தமிழ் நூல் தொகுப்புக் கலை கடுங்கோ பிற அகத்திணை நூல்களிலும் பாலைபற்றி நிரம்பப் பாடியுள்ளார்; ஆனால் இவர் பாடல்கள் ஐங்குறு நூற்றுக்கு ஏற்றவாறு நூற்றுக் கணக்கில் இருக்கவில்லை போலும்! மற் றக் கலித்தொகைப் புலவர் மூவருள் சோழன் நல்லுருத்திரனும் நல்லந்துவனாரும் கலித்தொகையில் தவிரப் பிற நூல்களில் தத்தம் திணைபற்றி ஒரு பாடலும் பாடவில்லை; எனவே தான், இவர்கள் ஐங்குறு நூற்றில் இடம் பெற முடியவில்லை. மருதக்கலி பாடிய மருதனிள நாகனார் பிற நூல்களில் பாடி யுள்ள முப்பத்தொன்பது பாடல்களுள் மருதம் பற்றியவை நான்கே பாடல்கள்தாம். இவர் கலித்தொகையில் மருதக்கலி பாடியதாலேயே மருதனிளநாகனார் எனப் பெயர் பெற்றார்; மற்றப்படி இவர் நிரம்ப மருதப் பாடல்கள் பாடாமையால் ஐங்குறு நூற்றில் இடம் பெறவில்லை. இவரன்றி, மருதம் பாடிய இளங்கடுங்கோ என்னும் புலவர் ஒருவர் உள்ளார்; இவர் நெடுந்தொகையில் இரண்டு மருதப் பாடல்களும், நற்றிணையில் ஒரு மருதப் பாடலும் மட்டுமே பாடியுள்ளார்; இவரும் மருதம் பற்றி நிரம்பப் பாடாததால் ஐங்குறு நூற்றில் இடம்பெறவில்லை. - இங்கே மற்றொரு செய்தியும் நினைவுகூரத் தக்கது. ஐந்து திணைகளைப் பற்றித் தனித்தனியே கூறும் கலித்தொகை கலிப்பாவால் ஆனது; ஐங்குறு நூறோ ஆசிரியப்பாவால் ஆனது. எனவே, கலித்தொகை ஆசிரியர்கள் கலிப்பா பாடு வதில் வல்லுநர் ; ஐங்குறு நூற்று ஆசிரியர்கள் ஆசிரியப்பா பாடுவதில் வல்லுநர் என உணரவேண்டும். வெண்பாவில் புகழேந்தியும் விருத்தத்தில் கம்பரும் வல்லுநர்கள் என்பதும். உலா பாடுவதில் ஒட்டக்கூத்தரும், பரணி பாடுவதில் சயங் கொண்டாரும், கலம்பகத்தில் இரட்டையர்களும் வல்லுநர்கள் என்பதும் நாம் அறியாததல்ல. கலிப்பாவில் ஒரு சிலர் வல் லவர், ஆசிரியப்பாவில் ஒரு சிலர் வல்லவர் என்பது போலவே, ஒவ்வொரு தியிைணலும் ஒவ்வொருவர் வல்லவர் என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது. அந்த வல்லமைக்கு ஏற்ப, அந்தந்தத் திணைபற்றி அழகிய பாடல்கள் மிகுதியாகப் பாடியிருப்பர். இதுகாறும் கூறியவற்றால், குறிப்பிட்ட தினைபற்றி