பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 649 தார். அந்தத் தமிழ்ப் பாடல்களுள் சிலவற்றின் தொகுப்பு இது. தொகுத்தவர் பெயர் தெரிய வில்லை. இடையிடையே உரைநடையும் உண்டு. இறுதியில், நந்திகேசுரர் பரமசிவனைக் கேட்டுக் கொண்ட பதினாறு பேறு என்னும் தலைப் பெயரு டன், பஞ்சநத மான்மியச் செய்யுளாகிய மறைகள் நிந்தனை' என்பது காணப்படுகிறது. (இது ஒரு சுவடி). R. 890. செய்யுள் திரட்டு கலைமகள், முருகன் முதலியோர் பற்றிய பாடல்கள், மணவாள நாராயண சதகம் முதலிய சதகப் பாடல்கள், வில்லி பாரதம். கம்ப ராமாயணம்-முதலியவற்றிலிருந்து சில பாக்கள், சீரங்க நாயகி-மதுரை மீனாட்சி முதலியோர் பற்றிய சில கீர்த்தனங்கள் இந்தத் திரட்டில் உள்ளன. R,310-b. அருட்பாமாலை ஆ-மாகாளம் அழகிய சிற்றம்பலவ தேசிகர். பல ஊர்ச் சிவன் மீது பாடியவை. ஊர்கள்: கூந்தலூர், திருப்புகலூர் சிறு வேளுர், திருவிடை மருதூர், திரு மருகல், திரு மாகாணம் இலந் துறை, திருக் குண மங்கலம், அம்பர், கருவிலி முதலியன. R238-i இரு து நூல் முதலியன பெண் வயதுக்கு வந்த காலப் பயன், பல்லி சொல் பலன், கோடியுடுக்கக் கூடிய கிழமை முதலியன பாடல்களால் தெரி விக்கப்பட்டுள்ளன. இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்கள் இறையனார் அகப்பொருள் என்னும் நூலில் சொல்லப் பட்டுள்ள துறைகளுக்கு இலக்கியமாகக் காட்டப் பெற்றுள்ள400-க்கும் மேற்பட்ட பழைய செய்யுட்களின் தொகுப்பு இது. பல கோவை நூல்கள், எட்டுத் தொகையுள் சில நூல்கள், வேறு சில பழைய நூல்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட பாடல் களும், சில தனிப்பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. R.434. கதம்பக் கோவை திருவாரூர்க் கோவை, திருச்சிற்றம்பலக் கோவை,