பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 தமிழ்நூல் தொகுப்புக் கலை குமர குரு தாச சுவாமிகள் பாடலும் திரு வலங்கல் திரட்டும் 1,2 காண்டங்கள் மகா தேஜோ மண்டல வெளியீடு இதில் இரண்டு நூல்கள் உள. முதல் நூல் வருமாறு: முதல் மண்டல மாகிய குமர குரு தாச சுவாமிகள் பாடல், சென்னை - சாது அச்சுக் கூடம். இரண்டாம் பதிப்பு 1930. மொத்தப் பாடல்கள் 1266. 74 நூல்களிலிருந்து பாடல் கள் திரட்டப்பட்டுள்ளன. பல ஊர்கள் - பல பொருள்கள்பற்றிப் பல்வேறு இனப் பாக்கள் உள்ளன. இரண்டாம் நூல் இரண்டாம் மண்டல் மாகிய திரு அலங்கல் திரட்டு. இது இரண்டு கண்டங்களாக உள்ளது. - முதல் கண்டம் மொத்தப் பாடல் - 601. சென்னை சாது அச்சுக் கூடம், இரண்டாம் பதிப்பு - 1929. இரண்டாம் கண்டம் இதன் மொத்தப் பாடல் - 1133. திரு அலங்கல் திரட்டு முற்றிற்று. நூலில் உள்ளவாறு மேலே உள்ள செய்திகள் தரப்பட் டுள்ளன. குமர குரு தாசர் 74 நூல்கள் இயற்றியுள்ளார் எனத் தெரிகிறது. மேலும், திரு அலங்கல் திரட்டு என்ற திரட்டும் இயற்றப்பட்டுள்ளது. அலங்கல்=மாலை. மாலை போன்ற பல பகுதிகளின் தொகுப்பு இது. இரண்டாம் கண்டம் தனி நூலாகவும் பதிப்பிக்கப்பட் டுள்ளது. மேற் கூறிய மூன்று பதிப்புகளையும் ஒரு நூலாகவும் தொகுத்து அச்சிட்டுள்ளனர். மூன்றிலும் சேர்த்து மொத்தப் பாடல்கள் 3000 ஆகும். குமர குரு தாசரின் நூல்பற்றி மேலும் அடுத்தாற்போல் அறியலாம். f