பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தமிழ் நூல் தொகுப்புக் கலை பெயர்களைப் பார்த்த பின்னரே, ஐங்குறு நூறு' என்னும் பெயர் வைக்கப்பட்டது என்னும் செய்தி ஈண்டு மீண்டும் நினைவுக்கு வரவேண்டும். அவை நானூறாக இருப்பதால் இது ஐ-நூறு எனப்பட்டது; அவற்றினும் இது குறுகிய பாடல்களை உடைத்தாயிருப்பதால், இது குறு நூறு' எனப் பட்டது. எனவே, ஐங்குறுநூறு என்னும் பெயர் அமைப்பி லிருந்தே, அந்த மூன்று நூல்களும் தொகுக்கப்பட்ட மாதிரி யிலேயே இந்த நூலும் தொகுக்கப்பட்டது என உணரலாம். இதற்கு விளக்கம் வேண்டும்: எண்ணிறந்து கிடந்த பாடல்களிலிருந்து தேர்ந்தெடுத்து ஒரு நானுறை நெடுந்தொகை என்னும் பெயரிலும், மற்றொரு நானுறைக் குறுந்தொகை என்னும் பெயரிலும், இன்னொரு நானுாறை நற்றிணை என்னும் பெயரிலும் தொகுத்தார் களல்லவா! அவ்வாறே ஐந்நூறு பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஐங்குறுநூறு என்னும் பெயரில் தொகுத்தனர். ஐங்குறு நூற்று ஆசிரியர்கள் ஐவரும் அவரவர் பாடியுள்ள திணையில் மிகவும் வல்லுநர் (Expert) ஆவர். அவர்கள் ஐங்குறு நூற்றில் உள்ள நூறு - நூறு பாடல்களோடு அமைந்து விடவில்லை. அவர வர்க்கு விருப்பமான திணையில் நூற்றுக்கு மேல் எண்ணிறந்த பாடல்கள் பாடியிருந்தனர். அப் பாடல்களுள் நெடுந் தொகைக்குச் சிலவும் குறுந்தொகைக்குச் சிலவும், நற்றிணைக் குச் சிலவும் அடியளவிற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்தனவற்றுள் சிறந்தனவாகத் திணைக்கு நூறு வீதம் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஐங்குறு நூறு என்னும் பெயரில் கூடலூர் கிழார் தொகுத்தார். இந்த உண்மையைப் பின்வரும் விளக்கத்தால் அறியலாம்: ஐங்குறு நூற்றில்,-மருதத்திணை பற்றிப் பாடியுள்ள ஒரம் போகியார், நெடுந்தொகையில் இரண்டு பாடல்களும், குறுந் தொகையில் ஐந்து பாடல்களும், நற்றிணையில் இரண்டு பாடல் களுமாக மற்ற நூல்களில் மொத்தம் ஒன்பது பாடல்கள் பாடியுள்ளார்; இந்த ஒன்பதில் ஏழு பாடல்கள் மருதமாகும். இரண்டாவதாக நெய்தல் திணையைப் பாடியுள்ள அம்மூவனார் நெடுந்தொகையில் ஆறும், குறுந்தைாகையில் பதினொன்