பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவ மாலை 383 திருவள்ளுவரின் காலத்தைக் கடைச்சங்க காலத்திற்குப் பின்னுக்குத் தள்ளுபவர் சிலர், கடைச் சங்கப் புலவர்கள் தமக் குப் பிற்பட்ட திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியிருக்க மு.4 யாது; பிற்காலத்தில் எவரோ பாடிய பாடல்களைச் சங்கப் புலவர்களின் பெயரால் தொகுத்துவிட்டனர்'- எனக் கூறு கின்றனர். இவர்களை நாம் திருத்த முடியாது; திருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்த நூல் என்னும் உண்மையான கொள்கையில் நாம் உறுதியாக நிற்போமாயின், இவர்தம் கருத்து அடிபட்டுப் போகும். - அகச் சான்று: திருவள்ளுவ மாலைப் பாடல்கள் சங்க காலத்திலேயே சங்கப் புலவர்களாலேயே இயற்றப்பெற்றவை என்பதற்குத் திருவள்ளுவ மாலையிலிருந்தே அகச்சான்றுகள் தர முடியும். திருவள்ளுவர் வேதத்தின் கருத்தைத் தமிழில் எழுதினார் என்னும் பொருளில், நான்மறையின் மெய்ப்பொருளை முப் பொருளா' (4) என உக்கிரப் பெருவழுதியாரும், மெய்யாய வேதப் பொருள் விளங்க' (28) எனக் காரிக் கண்ணனாரும். வேத விழுப்பொருளை வெண்குறளால் (37) என மதுரைப் பெரு மருதனாரும், "வேதப் பொருளை விர கால் விரித்து (42) எனச் செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனாரும் கூறியுள்ளனர். ஆனால் நக்கீரரோ, தானே முழுதுணர்ந்து தண் தமிழின் வெண் குறளால் (7) என, திருவள்ளுவர் தாமாகவே தண் தமிழில் திருக்குறள் இயற்றினார் எனக் கூறியுள்ளார். தமிழைத் தாழ்த்திப் பேசிய ஒருவன் சாகுமாறு பாடிய நக்கீரரின் தமிழ்ப் பற்று இந்தப் பாடலில் பளிச்சிட்டுள்ளது. எனவே, இந்தப் பாடலை நக்கீரரேதான் பாடியிருக்க வேண்டும். மற்றுமொரு சான்று: திருவள்ளுவ மாலையில் மருத்துவன் தாமோதரனார், 'சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேனளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில்-காந்தி மலைக்குத்து மால்யானை வள்ளுவர் முப் பாலால் தலைக்குத்துத் தீர்வுசாத், தற்கு” எனப் பாடியுள்ளார். இவர் மருத்துவன் தாமோதரனார் என மருத்துவராதலின் வழங்கப்படுகிறார். தமதுபெயருக்கும் தொழி