பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 தமிழ்நூல் தொகுப்புக் கலை 'பொய்கைமுனி பூதத்தார் பேயாழ். வார்தண் பொருநல்வரும் குருகேசன் விட்டு சித்தன் துய்ய குலசேகரன் நல்பாண நாதன் தொண்டரடிப் பொடிமழிசை வந்த சோதி வையம்ெலாம் மறை விளங்க வாள்வே லேந்தும் மங்கையர் கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும் செய்யதமிழ் மாலைகள்நாம் தெளிய ஒதித் தெளியாத மறைகிலங்கள் தெளிகின் றோமே” (தேசிகப் பிரபந்தம் - அதிகார சங்கிரகம்-1.) குருகேசன்-நம்மாழ்வார்; விட்டு சித்தன்-பெரியாழ்வார்) இப்பாடலில் ஆண்டாளும் மதுரகவியும் விடப்பட்டிருப் பதைக் காண்லாம். தேசிகப் பிரபந்தத்தின் மற்றொரு (383) பாடலில், ஆழ்வார்கள் பன்னிருவருடன் எதிராசரும் கூறப் பட்டிருப்பினும், - ஆண்டாளையும் மதுரகவியையும் நீக்கிச் சொல்லும் மரபு ஒன்று உண்டு என்பது இப்பாடலால் அறியக் கிடக்கின்றது. மற்றும், உபதேச ரத்தின மாலை என்னும் நூலி லுள்ள இரு பாடல்களை மீண்டும் காண்பாம்: "பொய்கையார், பூதத்தார், பேயார், புகழ்மழிசை ஐயன், அருள்மாறன், சேரலர் கோன்-துய்யபட்ட நாதன், அன்பர் தாள்துாளி, கற்பாணன், நன்கலியன், ஈதிவர் தோற்றத் தடைவாம் ஈங்கு”, "ஆழ்வார் திருமகளார் ஆண்டாள், மதுரகவி யாழ்வார், எதிராச ராம் இவர்கள்-வாழ்வாக வந்துதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும் இந்தஉல கோர்க் குரைப்போம் யாம்' என்பன பாடல்கள். இவற்றுள் முதல் பாடலில் பத்து ஆழ் வார்களும் அடுத்த பாடலில் ஆண்டாளும் மதுரகவியும் பிரித் துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு வெண்பாவில் பன்னிருவரையும் அடக்க முடியா தாதலின், இருவரை இரண்டாம் பாடலில் அமைத்தார் என்று கூறலாம். அங்ங்னமெனில், இந்த இருவரையும் கால முறைப் படி முதல் பாட்டில் வைத்து, திருப்பாணாழ்வாரையும் திரு