பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 719 புதுத் தமிழ்க் கவி மலர்கள் தொ - திருலோக சீதாராம். இமாலயப் பிரசுரங்கள், சென்னை, கலா மோகினி பிரஸ், சென்னை. 1957. தென் மொழிப் புத்தகத் தாபன ஆதரவு பெற்ற வெளியீடு-உள்ளுறை கவிமணியின் என் சுகதுக்கங்கள்'முதல் சுரதாவின் தென்னாட் டின் சித்திரை வரை 55 தலைப்புகளில் பாடல்கள். கவிமணி, சுரதா அன்றி மேலும் புலவர் பலரின் பாடல்கள் உள்ளன. ஒவ் வொரு புலவர் பற்றியும் கவிதைத் தொடக்கத்தில் சிறு வரலாறு உள்ளது.வரலாற்றில், ஊர்,பிறந்தநாள், புனை பெயர் பல்வேறு சிறப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் இரண்டாம் வெளியீட்டில், பாரதிதாசனின் தமிழ்ப் பேறு'என்னும் பகுதி யும் சேர்க்கப்பெற்றுள்ளது. சிவ போக சிந்தாமணி என்னும் ரமணானுபூதி ஆ - பாரத்வாஜி முகவைக் கண்ண முருகனார். வெ.ரமண யதானந்தர்.தி லிபர்ட்டி பிரஸ், சென்னை. முதல் பாகம் 1960. ரமண ரைப் பற்றிய பல் பாடல்களும் பல சிறு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

  • \

இரண்டாம் பாகம் - ஆசிரியர் அவரே. வெ. ரமண பக்தர் g60L, ‘Abrfuotra ulā', Qirairgosar. M.L.J.Press, Madras, 1961* ரமணரைப் பற்றிய பல பாடல்களும் பல சிறு நூல்களின் தொகுப்பும் உள்ளன. தமிழ்ப் பா மஞ்சரி ஆசிரியர்: உ.வே. சாமிநாத ஐயர். அடிக் குறிப்பு உண்டு. முதல் பாகம் (தெய்வத் துதிப் பாடல்கள்). பதிப்பாசிரியர் கி.வா. ஜகந்நாதன். வெளியீடு: உ.வே.சாமிநாதஐயர் நூலகம், அடையாறு, சென்னை. 1961. உள்ளுறை: 1. விநாயகப் பெருமான் துதிகள் , 2. முருகன் துதிகள்; 3. சிவ பெருமான் துதிகள், 4. அம்பிகை துதிகள்; 5, சரசுவதி துதிகள், மொத்தப் பாடல்கள் 343.