பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தமிழ் நூல் தொகுப்புக் கலை எ . து. பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது. கடம்பனூர்ச் சாண்டிலியன், இந்தப் பாடலின் கீழே துறையும் ஆசிரியர் பெயரும் தரப் பட்டுள்ளன. ஆசிரியர்,கடம்பனூர்ச் சாண்டிலியன்என்பவராம். ஒன்பது அடி கொண்ட இந்தப் பாடலே நற்றிணையின் 234 - ஆம் பாடலாக இருக்கவேண்டும். நற்றிணை-கழகப் பதிப்பின் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றோர் வருந்திய என்றுதொடங்கும் இறையனார் அகப்பொருள் உரைமேற்கோள் பாடல், நற்றிணையின் 234 - ஆம் பாடலாக இருப்பதற்கு வழி யில்லை; ஏனெனில், அப்பாடலில் முழுமையாக எட்டு அடி களே உள்ளன; அதன் இடையில் 'அஃதான்று' என்னும் தனிச் சீர் உள்ளது; அந்தத் தனிச் சீரை ஒரு தனி அடியாகக் கொண்டால்தான், அந்தப் பாட்டு ஒன்பது அடிகள் உடைய தாகி நற்றிணைக்கு ஏற்றதாக முடியும்; அஃது அவ்வளவு சிறப்பின்மையின், அந்தப் பாடலை நற்றிணையின் 234-ஆம் பாடலாகக் கொள்ளாமல், குறுந்தொகையிலுள்ள 307.ஆம் பாடலைக் கொள்வதே பொருத்தமாய்த் தெரிகிறது. இது பாலைத்திணைக்கு உரியது. எனவே, இனிக் குறுந்தொகை அச்சிடுபவர்கள், அதில் இப்பொழுதுள்ள 307-ஆம் பாடலை விலக்கியே அச்சிடலாம். அதேபோல; இனி நற்றிணை அச்சிடு பவர்கள், 234-ஆம் பாடலின் இடத்தைக் காலியாக விடாமல் அந்த இடத்தில் குறுந்தொகையிலுள்ள வளையுடைத் தனைய தாகி என்று தொடங்கும் 307-ஆம் பாலைப் பாடலை அமைத்து.அச்சிடலாம். இதனை ஆராய்ச்சியாளர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக !