பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 553 ஒவ்வொரு குறளை எடுத்துப் பல்லவியாகத்தொடங்கிக் கீர்த் தனையாக அமைக்கப் பெற்ற 133 பாடல்களின் தொகுப்பு இது. முதல்பாடல் அகரமுதல’-இறுதிப்பாடல் ஊடுதல் காமத்திற்கு இன்பம்"-ஆக 133 பாடல்கள். நூலின்தொடக்கத் தில் பெருமை கூறும் கீர்த்தனம் ஒன்றும், இறுதியில் வாழி' கூறும் கீர்த்தனம் ஒன்றும் உள்ளன. - - சாதன கீதம் 50 உருப்படிகள்-கீர்த்தனங்கள்-ஆ-சுத்தானந்த பாரதியார். சுர தாளம் - கோமதி சங்கர ஐயர். பாரதி பிரஸ், புதுச்சேரி1950-க்கு முன் வெளிவந்தது. - நாமக்கல் கவிஞரின் கீர்த்தனங்கள் ஆ-நாமக்கல் வே. இராமலிங்கம் பிள்ளை. இன்ப நிலையம், சென்னை, மெட்ரோ பாலிடன் பிரின்டிங்ஸ், சென்னை. 1954. கண்டதுண்டோ சொல்லுவீர் என்பது முதல் தமிழ் நாடு வாழ்க’ என்பது வரை பல கீர்த்தனங்கள் , இசை அருவி ஆ-திருச்சி ஜி. தியாகராசன். இசைப் பாடல்கள். இசைக் குடில் பதிப்பகம், சிவாஜி அச்சுக் கூடம், திருச்சி. 1950. "இறை வணக்கம் முதல் ஓங்குக ஓங்குகவே வரை 76 தலைப்புகளில் கீர்த்தனங்கள் உள்ளன. பொங்கல் புது வாழ்த்து ஆ-சுந்தர சண்முகனார். வெ-புதுவைப் பைந்தமிழ்ப் பதிப் பகம், புதுச்சேரி. சந்தானம் பிரின்டிங் ஒர்க்ஸ், புதுச்சேரி.1948. உ-'பொங்குக பாலே என்பது முதல் வாழ்க வாழ்கவே' என்பது வரை பத்துத் தலைப்புகளில் கீர்த்தனைப் பாடல்கள் உள்ளன. அத்வைத கீர்த்தனாநந்த லகரி ஆசிரியர்-அச்சுத தாசர். 120 கீர்த்தனப் பாடல்களின் தொகுப்பு இது. - (சில கீர்த்தனைத் தொகுப்புகள்) 1. கிருஷ்னையர் முதலியோர் கீர்த்தனங்கள்