பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 தமிழ்நூல் தொகுப்புக் கலை கூறப்படுகிறது.இந்த மூன்றின் தொடர்பாகத் தொகுப்பதற்கும் திரட்டுக்கமே அடிப்படையானது என்பதையும் மறந்துவிடு வதற்கில்லை. தொகுத்தவர், தொகுக்கச் செய்தவர் ஆகியோரின் விருப்பு - வெறுப்பு-நோக்கம் - மன உணர்வு ஆகியவற்றிற்கு ஏற்பவும் நூல் தொகுப்பு இருக்கும் என்பதாகவும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. இதில் வியப்பு ஒன்றும் இல்லை. சைவத் தேவாரப் பாடல்களைச் சைவ சமயத்தாரே தொகுத்தார்; வைணவத் திவ்வியப் பிரபந்தத்தை வைணவரே தொகுத்தார். மற்றவையும் இத்தகையனவே. ஆனால், இது பெரும்பான்மை யான நடைமுறை. எந்த வேற்றுமையும் பாராது பொது நோக்கில் தொகுத்தவர்களும் உண்டு. இது சிறுபான்மையான நடைமுறை. முதல் தொகுப்பு குறுந் தொகையா? உ.வே.சா. சில காரணங்களைக் குறிப்பிட்டு, எட்டுத்தொகை நூல் களுள் குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பட்டது என்று உ.வே.சா. கூறியுள்ளார். வையா புரியாரின் குழப்பம்: 'குறுந்தொகை, நற்றிணை - இவ்விரண்டு நூல்களும் ஏறத் தாழச் சமகாலத்தில் தொகுக்கப்பட்டன என்றுகொள்ளலாம்’என்று வையாபுரிப் பிள்ளை கூறுகிறார். அவர் எழுதிய வாக்கியம் இங்க்ே அப்படியே தரப்பட்டுள்ளது. ஏறத்தாழ’ ன்ன்பது அவர் கூற்றில் திடம் இல்லை என்பதை அறிவிக்கிறது. அடுத்து கொள்ளலாம்'என்னும் சொல்,'ஆகட்டும் பார்க்கலாம்’ என்பது போல் அப்படியும் இப்படியுமாக உள்ளது. அடுத்து, 'நற்றிணை, அகநானூறு - இரண்டு நூல்களும் பெரும்பாலும் சம காலத்தன என்று கொள்ளுதல் பொருத்த முடைத்தாம்' என்று கூறியுள்ளார். அவர் எழுதிய வாக்கியம் அப்படியே இங்கே தரப்பட்டுள்ளது. குறுந்தொகையும் நற்றிணையும் சம