பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 தமிழ்நூல் தொகுப்புக் கலை D. 2343. பூசா விதித் திரட்டு இது, அகத்தியர், திருமூலர், கொங்கணர் முதலான சித்தர்கள், அஷ்ட கர்மம் முதலிய பலவிதமான சித்திகள் பெறத் தேவியை வழிபட உறுகருவியாயிருந்த நாற்பத்து முக்கோண சக்கிரம், சிதம்பர சக்கிரம் முதலான சக்கிரங்கள் பலவும், இன்னின்னவாறு பொறிக்கப்பெற்றுத் தேவியை இன்ன விதமாக வழிபட வேண்டும் என உணர்த்துவது. இது, பூசை விதி, தீட்சாவிதி முதலிய நூல்களிலிருந்து எடுக்கப் பெற்ற சிற் சில பாடல் பகுதிகளின் திரட்டாகும். - இதில், நாற்பத்து முக்கோண சக்கிர விதி, அகத்தியர் பூசைவிதி, பஞ்ச தசாக்கிரி திருமந்திரம், வாலைத் தியான விதி திருமந்திரம், சிதம்பரவித்தை திருமந்திரம், அஷ்ட கர்மங் கட்கு உரிய மந்திரங்கள், கொங்கணர் தேவி பூசை விதி ஆகியவை பற்றிய பாடல்கள் திரட்டப்பட்டுள்ளன. கொங்கணர் பூசை விதி என்பது மட்டும் 32 பாக்கள் கொண்ட ஒரு தனி நூல் போல் தெரிகிறது. பெரும்பாலன தமிழில் உள்ளன. கிரந்தப் பகுதிகள் சிலவும் உண்டு. நாற்பத்து முக்கோண சக்கிர விதிப்படி பூசை விதி கூறும் பாடல் வருமாறு: "ஆமப்பா பூசைவிதி சக்கிரத்தைச் சொல்வேன் யாருத்தான் சொல்வார்கள் அப்பா கேளு - ኣ፡ ஒமப்பா தேவிக்கு ஆதி பீடம் உத்தமனே நாற்பத்து மூன்றே கோணம் காமப்பா வித்தையர்க் காதி வித்தை காசினியில் பூசை செய்வர் திசதீட்சை பெற்றோர் நாம்ப்பா விவளை முந்திப் பூசை பண்ணி நலமாகச் சிவயோகத் திருந்திட்டேனே" (க). 'க' என்றால் ஒன்று என்று பொருளாம். எனவே, இது முதல் பாட்டாகும். இந்தத் திரட்டை நோக்கும்போது, நம் முன்னோர்கள் எந்தெந்தத் துறைகளிலெல்லாம் என்னென்ன செய்திருக்கிறார்கள் என வியக்கத் தோன்றுகிறது. தமிழ்க் கவிதைக் களஞ்சியம் - தொகுப்பு: ரா.பி. சேதுப்பிள்ளை. வெளியீடு: சாகித்ய