பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 209 சங்கப் புலவர்கள் பலர் இயற்றிய உரைகளுள் நக்கீரரது உரையே சிறந்தது எனத் தேர்ந்தெடுத்தவர் உருத்திரசன்மர், என்னும் செய்தி முன்பே ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, உருத்திரசன்மர் கடைச்சங்ககாலத்தவர் என்பது உறுதி. உருத் திரனார் என்னும் ப்ெயரால், குறுந்தொகையில் (274) ஒரு பாடல் இருக்கிறது. இந்தப் பாடலை இயற்றிய உருத்திரனா ரும், உருத்திரசன்மரும் ஒருவரே என உறுதியாக எவ்வாறு சொல்ல முடியும்? அடுத்து, குறுந்தொகை தொகுத்த பூரிக்கோ பற்றி ஒன்றும் புலப்படவில்லை. ஐங்குறுநூறு தொகுத்த கூடலூர் கிழாரின் பாடல்கள் மூன்றும், நற்றிணை தொகுப்பித்த பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதியின் பாடல் ஒன்றும் குறுந்தொகை யில் இருப்பதால், குறுந்தொகை தொகுத்த பூரிக்கோவும் இவர்கள் காலத்தவராகவே இருக்கக் கூடும். 'கோ' என்பதால் இவர் அரச மரபினராயிருக்கலாம். சங்க நூல்களில் இவருடைய பாடல்கள் இல்லையாயினும் இவரும் கடைச்சங்க காலத்தவரே யாவர். மூன்றாவதாக, யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையாரிடம் வருவோம். இவர் கடைச் சங்க காலத்துச் சேர மன்னர்களுள் ஒருவர். சேர வேந்தர்களுள் கருவூர்ச் சேரமான் சாத்தன், சேரமான் இளங்குட்டுவன், சேரமான் கணைக்கால் இரும்பொறை, சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சேரமானெந்தை. முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் முதலியோர் இயற்றிய பாடல்கள் பல சங்கத்தொகை நூல்களில் இருப்பினும், யானைகட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஒன்றும் படியதாகக் காணப் படவில்லை. ஆனால், இவரைப் பற்றிக் 'குறுங்கோழியூர் கிழார்' என்னும் புலவர் பாடிய பாடல்கள் (17,20,22) மூன்றும் கூடலூர் கிழார் பாடிய பாடல் (229) ஒன்றுமாக மொத்தம் நான்கு uT–ು 567 புறநாறுாற்றில் உள்ளன. எனவே, இம் மன்னர் கடைச் சங்க காலத்தவர் என்பது தெளிவு. இதற்கு இன்னும் பல சான்றுகள் தரமுடியுமாயினும் இம்மட்டோடு அமைவோம். இந்த மன்னரது ஆட்சிக் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு (கி.மு. 62-கி.மு. 42) எனப் பேராசிரியர்