பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 தமிழ்நூல் தொகுப்புக் கலை மூவர் தேவாரப் பதிகங்கள், திருப்புகழ், கல்வெட்டுப் பாடல் கள், பெரிய நாயகியம்மை விருத்தம், நாவுக்கரசு தோத்திரம், திலகவதி அம்மை துதி ஆகிய நூல்களின் - நூற்பகுதிகளின் தொகுப்பு இது. ஆறுமுகக் கடவுள் பதிகங்கள் - சிதம்பரம் - பாண்டிய நாயகத்தில் எழுந்தருளியுள்ள ஆறுமுகக் கடவுள்மீது, சிதம்பரம் நடராச செட்டியார் இயற்றி யுள்ள சிறு நூல்களின் தொகுப்பு இது. பிலவங்க-ஐப்பசி-27. உள்ளுறை: விண்ணப்பமாலை, ஆனந்த மாலை, நவநாமப் புகழ்ச்சி, அற்புத மாலை, கீர்த்தனைகள்-ஆகிய சிறு நூல்களின் தொகுப்பு. திருவலங்கல் திரட்டு-முதல் காண்டம் மகாதேஜோ மண்டல வெளியீடு. சாது பிரஸ், சென்னை. இரண்டாம் பதிப்பு-1929, பல சிறு நூல்களின் திரட்டு. பல வகைத் திரட்டு ஆ - காரைக்குடி சொக்கலிங்கச் செட்டியார். தேவ கோட்டை திரு நாவுக்கரசு நாயனார் அச்சியந்திர சாலை. ஏவிளம்பி-புரட்டாசி. உ-திரு விரட்டை மணி மாலை, மயில் மலைச் சந்த விருத்தம், குன்றைச் சிலேடை வெண்பா, காழிச் சிலேடை வெண்பா, தில்லைச் சிலேடை வெண்பா, திருவாரூர் அந்தாதி, திருவாலவாய் அந்தாதி-ஆகிய நூல்களின் திரட்டு. பரங்கிரிப் பிரபந்தத் திரட்டு திருப்பரங் குன்றம் முருகன் மீது பாடப்பெற்ற நூல்களின் திரட்டு இது. ஆ - மு.ரா. அருணாசலக் கவிராயர், மீனலோசனி அச்சியந்திர சாலை - 1927. நூல்கள் - பரங்கிரிப்பாமாலை, பரங்கிரிக் கலித்துறை அந்தாதி, பரங்கிரிப் பதிற்றுப்பத் தந்தாதி, பரங்கிரி வெண்பா அந்தாதி, பரங்கிரி அலங்காரம், பரங்கிரி மும்மணிக் கோவை, பரங்கிரி அனுபூதி, பரங்கிரிக் கோவை-ஆகிய நூல்கள். மொத்தப் பாடல்கள்-1208. பாய நாசம் என்னும் சிங்கைப் பிரபந்தத் திரட்டு ஆ-சிவஞான யோகியின் சிறிய தந்தையாகிய நமச்சிவாயக்