பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 481 கொண்டதால், தாம் வழிபடுதெய்வமாகிய முருகனின் மாம னார்க்கும் அவர் அளவு கடந்த பெருமை கூறியுள்ளார். திரு மாலின் திருவிளையாடல்கள் பல புகழுடன் கூறப்பட்டுள்ளன. இதனால் அவர் சமயக் காழ்ப்பு இல்லாதவர் என்பது புல னாகும். முருகன் திருப்புகழோடு திருமாலின் திருப்புகழும் கூறப்பட்டிருப்பது சிறப்பே. - சந்தப் பாக்கள்: திருப்புகழை இனிய சந்தப் பாடல்களின் தொகுப்பு எனக் கூறலாம். அதனால்தான், வாக்கிற்கு அருணகிரி என்னும் புகழை அருணகிரியார் தட்டிக்கொண்டுள்ளார். தம் சுவை யான சந்தப் பாடல்களில் ஒலிக்குறிப்புகளை மிகுதியும் பயன் படுத்தியுள்ளார். திருவதிகையில் கெடில நதி பெருகும் போது, புது நீர் வரவு விழாவாக உழவர்கள் திமிதிம் எனப் பறை கொட்டுகிறார்களாம்: - . "திமிதிமி தெனப் பறையறையப் பெருகுபுனல் கெடிலநதித் திருவதிகைப் பதி முருகப் பெருமாளே." . . . என்பது பாடல் பகுதி. மற்றொரு பாடலில், தவில் டிமிட டிமுடிமு டிட்டிம் என முழங்குவதாகக் கூறியுள்ளார். 'டிமிட டிமுடிமு டிட்டிம் எனத் தவில் எமும் ஓசை' என்பது பாடல் பகுதி: தமிழின் சிறப்பெழுத்தாகிய ழகரத்தை வைத்து விளையாடவும் அருணகிரிநாதர் தவறவில்லை: 'வழவழென உமிழும்து கொழகொழென ஒழுகிவிழ' என்பது ஒரு பாடல் பகுதி. வல்லெழுத்துக்களை வைத்து விளை யாடிப் பாடியுள்ள ஒரு சந்தப் பாடலை முழுமையாகத்தான் காண்போமே. யாரும் கற்றுக் கொடுக்காமலேயே, இயற்கை யாக எவர் பாடினும் சந்தம் தானே வந்து விழும். இப்பாடல் வருமாறு:- - 'முத்தைத்தரு பத்தித் திருங்கை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர-எனவோதும்