பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காலம் 405 பெயர்களாலேயே மூவர் தமிழைக் குறிப்பிட்டுள்ளார்.தொடக் கத்தில், சம்பந்தர் திருமுறை-நாவுக்கரசர் திருமுறை-சுந்தரர் திருமுறை எனவும், சம்பந்தர் பதிகம்-நாவுக்கரசர் பதிகம் - சுந்தரர் பதிகம் எனவும் மூவர் பாடல்கள் பெயர் வழங்கப் பெற்றன. மற்றும், சம்பந்தர் தேவாரம் திருக் கடைக் காப்பு' எனவும், சுந்தரர் தேவாரம் திருப்பாட்டு எனவும் பெயர் வழங் கப்பட்டதுண்டு. திருநாவுக்கரசர் பாடல்களே - பதிகங்களே முதல் முதலில் தேவாரம்' என்னும் திருப்பெயர் பெற்றன. போற்றிப் பேணாமை: தேவார ஆசிரியர்கள் மூவரும், ஊர்தோறும் சென்று பதிகங்கள் பாடினர். அவை ஒலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. அவரவர் காலத்திலேயே அவரவர் பெயரால் நூல்தொகுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் காலத்தில், முப்பது தலைப்புகளில், தலைப்புக்கு இரு பாடல்கள் வீதம் எழுதினா லும், அப்பாடல்களுக்கு, இன்னார் கவிதைகள் என்ற மகுடம் இட்டு வெளியீட்டு விழாவும் நடத்துகின்றனர். இவ்வாறு தேவாரப் பாடல்கள் உரிய காலத்திலேயே போற்றிப் பேணப்பட வில்லை. அவை அழிவதற்கும் அழிக்கப் படுவதற்கும் தக்க காரணம் இருந்தது. சமணர்களையும் பெளத்தர்களையும் எதிர்த்துப் போராடவேண்டியிருந்ததால் போற்றிக் காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் ஒலைச் சுவடி களைத் திட்டமிட்டு அழித்திருக்கலாம். தமிழ்-தமிழ்-தமிழ்: தேவாரப் பாடல்கள் மூவர் தமிழ் என்று பொதுவாகக் குறிப்பிடப்பட்டன. தேவாரப் பதிகங்கள் தமிழ்மாலை என ஆசிரியர்களாலேயே அறிவிக்கப்பட்டன. நாளும் இன்னிசை யால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன் எனத் தமிழ் பரப்பு வதாகச் சொல்லப்பட்டதும் உண்டு. இவ்வாறு தமிழ்-தமிழ்தமிழ் என்று ஓலமிட்டதற்கு உரிய காரணம் யாது? சமசுகிருதத்தின் திரிபு மொழிகளாகிய பிராகிருதம், பாலி என்னும் இரு மொழிகளில், சமணர்கள் பிராகிருத மொழி யைக் கையாண்டும், பெளத்தர்கள் பாலிமொழியைப் பயன்