பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இருபதாம் நூற்றாண்டு கீர்த்தனைப் பாடல்கள் கடவுளர் மேலும் சில பொருள்கள் பற்றியும் பாடும் கீர்த் தனை என்னும் ஒரு வகைப் பாடல் உண்டு. இது, இசையரங்கு களில் பாடப்பெறும் தகுதி உடையதாகும். பல்லவி(எடுப்பு)அது பல்லவி (உடன் எடுப்பு) சரணங்கள் (அடிகள்) என்னும் மூன்று பிரிவுகள் உடையதாயிருக்கும் இவ்வகைப் பாடல். இத் தகைய பாடல்கள் பல கொண்ட தொகுப்புகள் சிலவற்றை இனிக் காண்பாம்: - அரி பஜனைக் கீர்த்தனை ஆசிரியர் - பராங்குசதாசர். பார்வை-திருவாலங்காடு ஆறு முக சுவாமி. பூமகள் விலாச அச்சுக் கூடம், சென்னை-1. இராகம் தர்ளத்துடன் பல்வகைக் கீர்த்தனைப் பாடல்கள் இதில் உள்ளன. பதிப்பாண்டு-1894. நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆசிரியர் - கோபாலகிருஷ்ண பாரதியார். வெளியீடு - பி.இரத்தினநாயகர் சன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திர சாலை, சென்னை -1935. இராகம் - தாளத்துடன் பல கீர்த்த னைப் பாடல்கள் உள்ளன. இறுதியில், சிதம்பரக் கும்மி, நடராசப்பத்து, நடராசர் பஞ்சாட்சரப் பதிகம், சோதிமயம்ஆகியவை தொகுக்கப்பட்டு உள்ளன. பரமார்த்த நாம சங்கீர்த்தன. பஜனாவளி ஆசிரியர் - சுந்தரம். யோகா பப்ளிஷிங் ஹவுஸ், கிரிநாத் பவர் பிரஸ், பெங்களுர் - 1.1952.தஞ்சை சரசுவதி மகால் நூல் இது. உள்ளுறை: குரு, கணபதி, முருகன், அம்பாள், சிவன், மால் - இவர்கள் மீது பல இசைப் பாடல்கள் உள்ளன. குன்றக்குடி குமரன் பேரில் ர்ேத்தனைகள் - M.G.O.S.NO. CLXIX – 1961 -- Government of Madras General Editor T. Chandra Sekar, M.A.,L.T.