பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 தமிழ்நூல் தொகுப்புக் கலை இவற்றைத் தொடர்ந்து, மஸ்தான் சாகிபு பாடிய நூல்கள் உள்ளன. அவை யாவன : குரு வணக்கம், ஆநந்தம், முகியித்தீன் சதகம், அகத்தீசர் சதகம், ஆனந்தக் களிப்பு, நிராமயக் கண்ணி, பராபரக் கண்ணி, றகுமான் கண்ணி, எக்காலக் கண்ணி, கண்மணி மாலைக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீஸ்வரக் கண்ணி, கீர்த்தனைகள்,-முதலிய சிறு சிறுநூல்கள் தொகுக் கப்பெற்றுள்ளன. ஆக மொத்தப் பாடல்கள் 1011 ஆகும். நூலின் இறுதியில் வாழி விருத்தம் என்னும் தலைப்பில் உள்ள இறுதிப் பாடல் வியப்பு தருகிறது. அது வருக : 'வாழிமேல் வாழி வாழி மருள்வாழி வாழி வாழி வாழிமேல் வாழி வாழி மருணேயம் வாழி வாழி வாழிமேல் வாழி வாழும் சிவஞானம் வாழி வாழி வாழிமேல் வாழி வாழும் குணங்குடி வாழி வாழி' மற்றுமொரு பதிப்பு கோட்டாறு கா.ப. ஷெய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் பரிசோதித்த பிரதிக்கு இணங்கியது. அ. அரங்கசாமி முதலியார் குமாரர் அமரம்பேடு இராசரத்தின, முதலியார் வெளியீடு. மலர் மகள் விலாச அச்சுக்கூடம், சென்னை. 1948. சுத்தப் பதிப்பு-விலை ரூபா 3. 23, தாண்டவ ராயப்பிள்ளை வீதி. 30–9–48. குணங்குடி மஸ்தான் சாகிபின் சில பாடல்களில், தாயு மானவர் பாடல்களின் சாயலைக் காணலாம். சுப்பிரமணியர் தோத்திரப் பாக்கள் ஆசிரியர்: காஞ்சி சிங்காரவேலு தேசிகர். சென்னை பூமாது விளக்க அச்சுக் கூடம், 3 ஆம் பதிப்பு. தாரணவைகாசி-1884 மக்கிய பழந்தாள் பிரதி. நூல்கள்: தணிகை சந்தப் பாமாலை, தணிகாசல மாலை, திருப் போரூர்த் தோத்திரப் பாமாலை, காஞ்சி குமரகோட் டப் பஞ்ச ரத்திநம், குமர கோட்டம், நாகமாலை தோத்திரப்