பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தமிழ் நூல் தொகுப்புக் கலை துத் தொகுக்கப்பட்டதாகும். எனவேதான் இது தனித்தொகை நூலாயிற்று. - - * இந்த நூல், முற்கூறிய நானூறு பாடல்கள் கொண்ட நான்கு நூல்கட்கும் பின்னால் தொகுத்துப் பெயர் வைக்கப் பட்டதாகும். அவை நானூறு பாடல்கள் கொண்டிருந்ததால் இஃது ஐந்நூறு எனப்பட்டது; நீண்ட பாடல்களைக் கொண்ட அந் நூல்களினும் குறுகிய பாடல்களைக் கொண்டதால் இது 'குறு என்னும் குறுகிய அடைமொழி பெற்றது; ஐந்து திணை களும் கலந்துவரும் அந்த நூல்களைப் போல் இல்லாமல், ஐந்து திணைகளும் தனித்தனியாக அமைக்கப்பெற்றதால் இஃது 'ஜங்குறுநூறு எனப்பட்டது. நீண்ட நான்கு நூறுகளை நோக்க, ந்ைது குறுநூறு ஆயிற்று இது. இவ்வாறாக இதன் பெயர் அமைப்பைக் கொண்டே, இந்நூல், மூற்கூறிய "நான்கு நூல்களுக்குப் பின்னால் தொகுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டது என்பது புல்னாகும். - இந்நூலைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றியும் தொகுக்கப்பட்ட முறை பற்றியும், பின்னால் இந்நூலைப் பற் றிய தனித்தலைப்பில் விரிவாகக் காணலாம். பதிற்றுப் பத்து எட்டுத் தொகை நூல்களுள் ஆசிரியப்பாவால் ஆன ஆறு நூல்களுள் இன்னும் எஞ்சியிருப்பது பதிற்றுப்பத்து ஆகும். இது புறப்பொருள் பற்றியது. பதிற்றுப்பத்து என்றால், பத் துப் பத்து (10x10=100) - அதாவது - நூறு பாடல் கொண்ட நூல் என்பது பொருளாகும். இது, மற்றத் தொகை நூல்களைப் போல் இன்றி, குறிப்பிட்ட பத்துச் சேரமன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்ட பத்துப் புலவர்களால் பத்துப்பத்துப்பாடல் வீதம் பாடப்பெற்ற நூறு பாடல்களைக் கொண்டதாதலின் தனி நூலாகத் தொகுக்கப்பெற்றது. இது பற்றிய விவரங்களைப் பின்னால் தனித்தலைப்பில் விளக்கமாகக் காணலாம். கலித் தொகை எட்டுத் தொகையில் ஏழாவதாகிய கலித்தொகை, ஆசிரியப் பாவால் ஆன முற்கூறிய அறுநூல்கள் போலின்றிக் கவிப்பாவால் ஆனதாகையாலும், ஐந்து திணைகளையும் பற்றித் தனித்தனியே ஐவர் பாடிய தனித்தனியான ஐந்து பகுதிகளின்