பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்து 327 'முதலும் இறுதியும் சிதைவது இயற்கை என்னும் பொது முறைப்படி, பதிற்றுப் பத்துச் சுவடியைக் கையாண்டு படித்து வந்தவர்களால் முதல் பத்தும் இறுதிப் பத்தும் சிதைந்த நிலை யில் இருக்க, பின் வந்தவர்கள் அவற்றைப் பற்றி ஒன்றும் அறி யாராதலின், சிதைந்த நிலையிலிருந்த அந்த இரு பத்துக்களை எடுத்து எறிந்து விட்டு, இடையிலே நல்ல நிலையில் இருந்த எட்டுப் பத்துக்களை மட்டும் எடுத்துத் தனியே கட்டி வைத் திருக்கலாம். இப்படியாக ஏதோ ஒரு வகையில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இழக்கப்பட்டு விட, இடையிலே உள்ள எட்டுப் பத்துக்கள் மட்டும், பதிற்றுப் பத்து’ என்னும் உருவத்தில் உயிர்த் திருந்தன. பதிற்றுப் பத்தின் ஒலைச் சுவடிப் படிகள் எல்லாம் அழிந்து போக-அல்லது - அழிக்கப்பட்டு விட, ஒரே ஒர் ஒலைச் சுவடிப் படி மட்டும் உயிர்த்தெழுந்திருந்ததாக முன்பு க்றி னோமே, அந்தப் படி தான் இப்படி எட்டுப் பத்துக்களோடு நின்றுவிட்ட படியாகும். அந்தப் படியைப் பார்த்துப் பின்னர் பல படிகள் எடுக்கப்பட்டன. பதிற்றுப் பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் மறைந்த மாய வரலாறு இவ்வாறாகத்தான் இருக்கக் கூடும். - பதிற்றுப் பத்தின் முதல் பத்தும் இறுதிப் பத்தும் இழக்கப் பட்டன வெனில், நூல் பெயர் எவ்வாறு தெரிய வந்தது? முதல் பத்தின் முகப்பில், பதிற்றுப் பத்து என நூற்பெயர் எழுதப் பட்டிருக்கும்; இறுதிப் பத்தின் இறுதியிலும் பதிற்றுப் பத்து முற்றும் என நூற்பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இவ்விரு பத்துக்களும் கிடைக் காமையால், இடையே எஞ்சியிருந்த எட்டுப் பத்துக்களும் பதிற்றுப் பத்து என்னும் நூலைச் சேர்ந்தவை என்பது எவ்வாறு தெரிய வந்தது? இதற்கு விடை கூறல் எளிது: கிடைத்திருக்கும் எட்டுப் பத்தின் எண்பது பாடல்களுள், இல புறத்திரட்டிலும் தொல்காப்பிய உரையிலும் பிறவற்றி லும் நூற்பெயருடன் கொடுக்கப் பட்டிருப்பதால் அந்தப் . பாடல்களைக் கொண்ட எட்டுப் பத்துக்களும் பதிற்றுப் பத் தைச் சேர்ந்தவை என உணரப்படவே, பதிற்றுப் பத்து என ஒரு நூல் இருக்கவேண்டும் எனவும் அந்நூலின் முதல் பத்தும்