பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 677 1. கருப்பையா பாவலர் இயற்றிய திருக் கோட்டாற்றுக் கலம்பகம். - 2. சாத்தன் குளம் சி.வெ. அரவ மூர்த்தி இயற்றிய தோத் திரப் பாக்கள். 3. கமுதி-மீறாணயினார் புலவர் இயற்றிய தியான மஞ்சரி ஆகியவை. இந் நூலாசிரியரின் ஆசிரியர் பெயர், ஷெய்கு முகியித் தீன் மலுக்கு முதலியார் என உள்ளது. தமிழ் நாட்டுக் கிறித்துவர் கள் சிலர், தாம் மதம் மாறினும், சாதிப்பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வதுண்டு. காட்டு: வேதநாயகம் பிள்ளை, சவரி ராயலு நாயகர் முதலியன. இது போலவே, தமிழர் இசுலாம் மதத்திற்கு மாறினும் தம் சாதிப் பட்டத்தைப் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வது உண்டு என்பதை, இந்த மலுக்கு முதலியார்’ என்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் கிறித்தவர்கள் சாதிப் பட்டம் போட்டுக் கொள்ளும் அளவு, இசுலாமியர் போட்டுக்கொள்வதில்லை. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு பழநி, மு. மாம்பழக் கவிச்சிங்க நாவலர் இயற்றிய நூல் களின் தொகுப்பு இது. தொகுப்பு: பெரியகுளம் எம்.பி பழநிசாமி யாசாரியார். மதுரை விவேக பாது அச்சி யந்திர சாலை. முகவுரை- 3-6-1908. இது இரண்டு பாகம். கொண்டது. முதல் பாகம்: விநாயகமூர்த்தி பதிகம் முதல் ஆனந்த கீத ரசம் முடிய 15 நூல்கள் உள்ளன. பிறகு, மாம்பழக் கவிச் சிங்க நாவலர் துதிப் பாசுரத் தொகை என்னும் தலைப்பில் தனித்தனித் தோத்திரப் பாக்களின் தொகுப்பு உள்ளது. இறுதியில் சிங்கார ரச மஞ்சரி உள்ளது. இரண்டாம் பாகம்: சந்திர விலாசம் என்னும் நூலும் தனிச் செய்யுட் கோவை என்னும் தொகுப்பும் உள்ளன. நாவலரின் பிறப்பு 1836; இறப்பு 1884,