பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பதினாறு படலம் நூல் அறிமுகம்: பன்னிரு படலம் என்னும் இயல் தமிழ் நூலைப்பற்றி மேலே ஆராய்ந்தோம். இதேபோல் பெயர்பெற்ற பதினாறு படலம்' என்னும் இசைத்தமிழ் நூல் ஒன்றைச் சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியர் அறிமுகப்படுத்தியுள்ளார். சிலப்பதிகாரம்புகார்க் காண்டம் - கானல் வரி' என்னும் தலைப்பின் தொடக்கத்தில் உள்ள, "சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர் புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தருங் கோடு மானியு நரம்பு மென்று இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங் கிப் பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசை யெழிஇப் பண்வகையால் பரிவு தீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள்மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடை என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் கரணத்துப் பட்ட வகைதன் செவியின் ஒர்த்து ஏவலன் பின் பணி யாதெனக் கோவலன் கை யாழ் நீட்ட...... என்னும் பகுதியில், மாதவி, யாழ் நல்ல நிலையில் உள்ளதா என ஆராய்ந்து (சோதித்துப்) பார்த்துக் கோவலன் கையில் கொடுத்தாள், என்னும் செய்தி கூறப்பட்டுள்ளது. மாதவி முதலில் யாழினைக் கையில் ஏந்தி, பண்ணல், பரிவட்டணை