பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 651 கும் நிலை, கிரகப் பார்வை, கால சக்கரம், பல்லி விழும் பலன், தும்மல் பலன், அலகு நூல் முதலியவை உள்ளன. நூலின் இறுதிப் பாடல் வருமாறு: 'ஒன்பது கோள் தனக்கு உறுபலன் உரைத்த காலை அன்புடன் அருக்கானாகில் ஆறு......தாகும். சந்திரன் தானே யாகில் முப்பது நாள தாகும் விந்தைசேர் வியாழன் தானும் வெள்ளியும் முப்பதாகும்' இந்த அறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் இரண்டாம் அடியின் ஐந்தாம் சீர் அழிந்துவிட்டுள்ளது. தமிழா! இந்தா உன் சொத்து! தொகுப்பு:எம்.ஆர். அடைக்கலசாமி, லொயோலா கல்லூரி, சென்னை. வெளியீடு: பால் நிலா பதிப்பகம், சென்னை மாணிக்கம் பிரஸ், அமைந்தகரை, சென்னை, மதிப்புரைகள்: நாவலர் நெடுஞ்செழியன், மு.அ. முத்தையச் செட்டியார் முதலியோர். ஆண்டு 1968. உள்ளுறை: நற்றிணை முதல் கண்ணதாசன் நூல்கள் வரையிலும் - அதாவது, சங்ககாலம் - இடைக்காலம் - பிற் காலம் வரையிலுமான நூல்களுள் 65 நூல்களிலிருந்து 1500 பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுத் தொகுக்கப்பெற்றுள்ளன. இயற்கை அழகு, இதய அழகு, வாழ்க்கை அழகு என்னும் மூன்று பெரிய தலைப்புகளின் கீழ், 200 உள் தலைப்புகள் உள்ளன. மொத்தப் பக்கங்க்ள் - 821. பலநூல் திரட்டு (No.2029) உள்ளுறை: நான் மணிக் கடிகை, பரிபாடல் உறுப்பு இரும்பல் காஞ்சி, நாரத சரிதை, அறநெறிச் சாரம், ஒட்டக் கூத்தர் விசாரணை, இன்னா நாற்பது, சிறுபஞ்ச மூலம், கள வழி நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது ஆகிய நூல்களிலிருந்து சிற்சில பாடல்கள் எடுத்துத் தொகுக்கப்பட் டுள்ளன. பன்னூற்பா (No.374) பிரமோத்திர காண்டம் முதலிய சில சைவப் புராணங் களிலிருந்தும் சில சோதிட நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட