பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 699 சங்கிலி விநாயகர் மும்மணிக் கோவை, சிவபிரான் இரட்டை மணி மாலை, திரு முருகன் பதிப்பகம், சர்வ லோக நாயகி மாலை-முதலியவற்றின் திரட்டு. ழரீ ரமண நூல் திரட்டு வெ.இரமணாசிரமம் நிரஞ்சனானந்த சுவாமி, திருவண்ணா மலை. இரண்டாம் பதிப்பு 1934. நூல்கள்: அருணாசலத் துதிப் பஞ்சகம், உபதேச நூல் மாலை, அனுவாத நூல் மாலை, அருள் மொழித் திரட்டு-என்பன. அருங்கலச் செப்பு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. திருத்தம் - வீடுர் ஏ.தர்ம சாம்ராஜ்ய சாத்திரியார். பதிப்பு-குடந்தை எஸ். சயராமை யர். கோமளாம்பிகா பிரஸ், கும்பகோணம். 1941 தம் தந்தை எழுதிவைத்திருந்த கைப் படியைக் கொண்டு பதிப்பித்ததாகப் பதிப்பாசிரியர் கூறியுள்ளார். இதிலுள்ள சில செய்யுட்கள் வேறு சில நூல்களில் காட்டப்பட்டுள்ளன. இது சைன மத நூல். பல பொருள் பற்றிய பல வகைப் பாடல்களுடன், திருக் குறள் போன்ற 180 குறள்கள் உரையுடன் உள்ளன. அரிய பொருள்கள் வைக்கப் பெற்றுள்ள செம்புக் கலம் போன்றது இந்நூல் என்னும் கருத்தில், நூலுக்கு அருங்கலச் செப்பு என் னும் பெயர் வைக்கப்பட் டிருப்பதுபோல் தெரிகிறது. தேம்பா மாலை மாதா கோயில் அச்சகம், புதுவை. மூன்றாம் பதிப்பு-1929. உள்ளுறை: வீரமாமுனிவரின் தேம்பாவணி என்னும் காவியத் திலிருந்து சில பாகங்கள், மேலும் அவர் இயற்றிய வெண் கலிப்பா, மாலை, தேவாரம், கலம்பகம், அந்தாதி, வண்ணம் ஆகியவை உள்ளன. D.2337 சித்தர் பன்னூல் பாடல் திரட்டு அகத்தியர், போகர், ரோம ருஷி, கொங்கணர், சட்டை முனி, போதைமுனி ஆகிய சித்தர்கள் பலர் இரசவாதம் பற்றி யும் மருத்துவம் பற்றியும் கூறியுள்ள பல நூல் பாடல்களின் தொகுப்பு இது. பெரும்பாலும் இரசவாதம் பற்றிய பாடல்