பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 9 என்பது பேரகத்திய நூற்பா என்று சொல்லப்படுகிறது. செய்யு ளாகிய இலக்கியம் இல்லாமல் எதைப்பற்றி இலக்கணம் எழுது வது? இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் இயம்பினார்கள். எனவே, இலக்கியமே முந்தியது. பலரும் பல்வேறு வகைப் பாடல்கள் பாடினார்கள். அந்தப் பாடல்களைப் படித்தறிந்த அறிஞர்கள், இனி இன்னின்ன பாடலை இன்னின்னவாறுதான் இயற்ற வேண்டும்; இன்னின்னவாறு இயற்றும் பாடல்கள் இன்னின்ன பெயர் பெறும் என்று கரைகோவினார்கள். கரை போட்டால்தானே ஆற்று நீர் கண்டபடி ஒடிச் சிதைக்காமல்சிதையாமல் நேரிதின்ஒடிச், சிதறாமல் பயன்தரும்! செய்யுள் இயற்றம் முறைக்குப் போட்ட அத்தக் கரைக்குத்தான், செய் யுள் இலக்கணம்' என்னும் பெயர் சூட்டப்பட்டது. எனவே, பாடற்கலை, தொடக்கத்தில் எந்த இலக்கணக் கட்டுப்பாடும் இன்றி, இயற்கையாகப் பொதுமக்களிட மிருந்து தோன்றியது என்னும் பேருண்மை புலப்படும். அஃதாவது படிக்காத பலதுறைப் பொது மக்களிடையே புழங்கிய நாட்டுப் பாடல் போன்றதொரு வகைப்பாடல்களே அந்தக் காலத்தில் முதல் பாடல்களாக இருந்தன. பின்னர், இவற்றை அடிப்படி யாகக் கொண்டு படிப்படியாக இலக்கண வரம்பு பெற்று வளர்ந்து வந்தவையே செய்யுட்கள் ஆகும். அஃதாவது பாட்டுக்கலை, யாப்பிலக்கணம் கற்ற புலவர்களிடமிருந்து பிறக்கவில்லை; படிக்காத பாமர மக்களிடமிருந்தே பிறந்தது. அதனால், பாடல்கள் இயற்கைச் சூழ்நிலை உடையனவாய் உள்ளத்தெழுந்த உணர்ச்சிகளின் உண்மையான உருவமாய் அமைந்த உவகை தந்தன. இது பாடற்கலையின் குழவிப் பருவம். குழவி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக வளர்ந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பாடலும் கவிதையும்: பாடலைக் குறிக்கச் செய்யுள், யாப்பு, பா, பாட்டு முதலிய பெயர்கள் பண்டு வழங்கின. இடைக்காலத்தில் கவி' என்ற சொல் வடமொழியிலிருந்து வந்து குடியேறி நிலைத்தது. இரு பதாம் நூற்றாண்டாகிய இந்தக் காலத்திலோ ‘கவிதை' என் னும் சொல், எப்படியோ எந்த வழியாகவோ நுழைந்து