பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் தொகுப்புக் கலை 31 யும் குறித்து நின்று, பின்னர்ப் பாமாலையை மட்டும் குறிக்கக் கூடிய நிலைக்கு மாறி வந்து விட்டது என்பதாகும். இரண்டாவதாகப் பிரெஞ்சு மொழியிலுள்ள மூன்று நூல் களையும் எடுத்துக் கொள்வோம். அவற்றுள் முதல் நூல், ஆந் தொலொழி என்னும் சொல்லுக்குப் பூமாலை என்னும் பொருள் மட்டுமே கூறுகிறது. anthos என்றால் மலர்; logie என்றால் சேர்க்கை-என்றெல்லாம் இந்த நூல் பொருள் விளக்கு கிறது. மற்றும், ஆந்தொலொழி என்னும் சொல்லாட்சி, பிரெஞ்சு மொழியில் பதினாறாம் நூற்றாண்டில் ஏற்பட்டதாக வும் இந்நூல் கூறுகிறது. இரண்டாவது நூல், பூமாலை, பாமாலை, பூக்களின் வரலாற்றுநூல் என்னும் முப்பொருள் தருகிறது. பூமாலை படிப்படியாகப் பாமாலைக்கு வந்துவிட்ட வரலாற்றை இதனாலும் அறியலாம். - இறுதியாக, ஆங்கிலத்திலுள்ள கலைக்களஞ்சியங்கள் (Encyclopaedias) மூன்றையும் காண்போம். இவற்றுள் முதல் கலைக் களஞ்சியம், ஆந்தாலஜி என்பது பல்வேறு பாக்களின் சேர்க்கையாகும்; (இந்தச்சொல் கிரீக் மொழியிலிருந்துவந்தது); இதன் தொடக்ககாலப் பொருள் பூமாலை அல்லது பூக்களின் தொகுப்பு என்பதாகும் ...” என்னும் கருத்துப்படக் கூறிச்செல் கிறது. இரண்டாம் கலைக் களஞ்சியமும், மூன்றாம் கலைக் களஞ்சியமும், ஆந்தாலஜி என்றால் பாக்களின் தொகுப் பாகும்’ என்று வெளிப்படையாகப் பொருள் விளக்கம் செய்து, "இச் சொல் கிரீக் மொழியிலிருந்து வந்தது. இது தொடக்கத். தில் பூக்களின் தொகுப்புக் குறித்தது என்னும் கருத்தை ஏனோ' தானோ என்ற முறையில் அடைப்புக் குறிக்குள் குறிப்பாகக் கூறியுள்ளன. பூமாலை என்னும் பொருள் சிறுகச் சிறுக மறைய. அதன் இடத்தைப் பாமாலை அழுத்தப் பற்றிக் கொண்ட வர லாற்றை இந்த ஆங்கிலக் கலைக்களஞ்சியங்களாலும் தெளி வாக அறியலாம். - - பாமாலையே பூமாலை மேற் குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய மொழிச் சொற்களைப் போலவே, மாலை என்னும் தமிழ்ச் சொல்லும், முன்னர் பூக்களின் தொகுப்பைக் குறித்து நின்று, பின்னர்ப் பாக்களின்