பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் 527 என்று எண்ணித் திரட்டு என்னும் அணைக்குள் தேக்கி வைத்த னர்-மாலை என்னும் தொடைக்குள் தொடுத்து வைத்தனர் நம்முன்னோர்கள். கழக காலத்தைத் தொடர்ந்தாற் போன்ற அடுத்த காலத் தில் தோன்றிய தனிப் பாடல்களும் இடைக்காலத்தில் தோன்றிய பாடல்களும் பிற்காலத்தில் தோன்றிய பாடல்களும் தொடுக்காத மணிகளாய் இறைந்து உருண்டு கிடந்தன. அவற்றுள் மறைந்தனபோக, கிடைத்த பாடல்களை அறிஞர்கள் சிலர் தனிப் பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்து வைத்தனர். சிலர் சில பாடல்களைத் தொகுத்தனர். அவைபோக மேலும் பல உதிரிப் பாடல்கள் கிடைத்தன. பின் வந்தவர்கள் அவற்றைத் தொகுத்தனர். இவ்வாறு காலத்துக்குக் காலம் கிடைத்துக்கொண்டிருந்த உதிரித் தனிப் பாடல்கள் பற்பல திரட்டுகளாகத் தொகுக்கப்பட்டன. இவ்வறாகத் தனிப் பாடல் திரட்டு என்னும் பெயரில் பல த்ொகை நூல்கள் உள்ளன. அவற்றைக்காணலாம்: தனிப் union.6 - 1873 அச்சிட்ட ஆண்டு - 1873. இது, தில்லையம் பூதுார் சந்திர சேகர கவிராச பண்டிதர் & காஞ்சி கச்ச பாலய அய்யர் ஆய்ந்து வெளியிட்ட பதிப்புக்கு இணங்க, பொன்னுசாமித் தேவர் ஒப்புதலின்படி, வா.வரதராசுலு நாயுடு அவர்களால் காஞ்சிபுரம் இயற்றமிழ் விளக்க அச்சுக் கூடத்தில் அச்சிடப் பட்டது. பக்கம்-1291. மொத்தப் பாடல்கள்-1172. இதில், காளமேகப் புலவரின் 187 பாடல்கள், ஒளவையார் பாடல்கள் 69, வள்ளுவர் முதல் பலர் பாடிய பாடல்கள் சில, வள்ளுவர் 17, கம்பர் 76, ஒட்டக் கூத்தர், 38 அந்தகக் கவி வீர ராகவ முதலியார் இருபதிற்குமேல், பல பட்டடைச் சொக்க நாதர் 66 - இவ்வாறு பலர் பாடிய 1172 பாடல்கள் உள்ளன. மற்றும் ஒரு பதிப்பு மேற்கூறிய திரட்டு 1877 ஆம் ஆண்டில் மற்றும் ஒரு