பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழ் நூல் தொகுப்புக் கலை பட்டுளள்ன என்னும் உண்மை புலனாகும். முடியுடைப் பேரரசர்கள் - சிற்றரசர்கள் - குறுநில மன்னர்கள்-வள்ளல்கள் முதலியோரின் கொடை, வீரம், பண்பு முதலியவை சிறப்பிக்கப் பெற்றிருக்கும் காட்சியைப் புறநானூற்றில் மிகுதியாகக் காணலாம்: அடுத்து, பொதுவான உலக இயல்புகள் - நடைமுறைகள் - மெய்யறிவுக் கோட்பாடுகள், நிலையாமை யுணர்வுக்ள், உள்ளப் பண்பாட்டுக் கூறுகள் முதலியவை மிகுதியாக இடம் பெற்றுள்ளமையை அறிய லாம். எனவே, தமிழர்கள் அகப்பொருள். அல்லாத புறப் பொருள் என்னும் பெயரால் போரைப்பற்றியே பாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூற முடியாது: இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு வளம்பெறுதற்கு வேண்டிய வழி முறை களையே வகுத்துள்ளார்கள்-என்னும் பேருண்மையும்புலனாகும். மற்றும், புறநானூற்றால், பண்டைக்கால வரலாறும் பண்பாடும் தெரியவருகின்றன. - புறநானூறு திணைவாரியாகத் தொகுக்கப் படவில்லை; பன்னிரு திணைகளும் கண்டபடி மாறிமாறிக் கலந்துள்ளன. புறநானூறு புலவர் வாரியாகவும் தொகுக்கப்படவில்லை; பலர் பாடல்களும் விட்டுவிட்டு மாறிமாறிக் கலந்தே அமைக் கப்பட்டுள்ளன. ஆனால், புறநானூற்றுத் தொகுப்பில் ஒரு வகைக் கலைநயம் கையாளப்பட்டுள்ளது; அஃதாவது, புறநானூறு அரசர்களை மையமாகக் கொண்டு தொகுக்கப் பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. அரசர்களுள்ளும் முடி யுடை மூவேந்தர் முதலிடம் பெற்றுள்ளனர்; அடுத்து சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், முதலியோர், மாறிமாறி இடம் பெற்றுள்ளனர். முற்பகுதியில் இடம்பெற் றுள்ள முடியுடைய வேந்தர்கள் தொடர்பான பாடல்கள் நூல் முழுவதும் இடையே ஒரோவழி இருக்கத்தான் செய் கின்றன. முடியுடை மூவேந்தர் தொடர்பான பாடல்களை அமைத்த முறையில் ஒருவகை அழகு உள்ளது. சேரமன்னர் முதலிலும் பாண்டியர் இரண்டாவதாகவும் சோழர் மூன்றாவதாகவும் மாறிமாறி இடம் பெற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக, - புற