பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 583 பதினேழாம் தொகுதி கவி குஞ்சர பாரதியார் முதல் பாரதிதாசன் உட்படப் பதினான்கு புலவர்களின் 50 பாடல்கள். இசை: எம்.எம். தண்டபாணி தேசிகர். சுரதாளம்: டி.என். சிவ சுப்பிரமணியப் பிள்ள்ை. அ.ப.ப.க.க. வெளியீடு - 1948. பதினெட்டாம் தொகுதி க. பொன்னையா பிள்ளையின் பல இசைப் பாடல்கள் - சுரத்துடன். சுரதாளக் குறிப்பு: க.பொ.சிவான்ந்தம் பிள்ளை. தொகுப்பு: லெ.ப.கரு, இராம நாதன் செட்டியார். அ.ப.க.க. வெளியீடு. கிராஸ்வேடு அச்சுக் கூடம், சிதம்பரம்-1949. பத்தெர்ன்பதாம் தொகுதி அருணகிரி நாதரின் 101 திருப்புகழ்ப் பாடல்கள். இசை: காஞ்சி நாயனாப் பிள்ளை, சித்துர் சுப்பிரமணியப் பிள்ளை. சுரதாளம்: ப. வைத்தியலிங்கம் பிள்ளை. குறிப்புரை க.வெள்ளை வாரணனார். அ.ப.க.க. வெளியீடு-1952. இருபதாம் தொகுதி பரத சங்கிரகம் - ஆசிரியர்: அறம் வளர்த்தான். தொகுப் பும் பதிப்பும்: க. வெள்ளை வாரணனார். அ.ப.க.க. வெளியீடு - The wednesday Review Press, glağ6 gü60ğG36°f). 1954. Lig ; சங்கிரகம் என்னும் இந்நூல், நாட்டிய சாத்திரமாகிய பரதத் தின் இலக்கணத்தைத் தொகுத்துக் கூறுவது எனப் பதிப் பாசிரியர் வெள்ளை வாரணனார் முகவுரையில் கூறியுள்ளார். இருபத் தோராம் தொகுதி சிதம்பரம் சி.எஸ். நடராச சுந்தரம் பிள்ளை இயற்றிய வற்றின் தொகுப்பு இது. இதில் உள்ளவை: 28 கீதங்கள், 20 தான வர்ணங்கள், 33 கீர்த்தனங்கள், 5 பதங்கள் ஆகும். தொகுப்பு: குடந்தை ப. சுந்தரேசன். சிட்டி பிரஸ், திருச்சிராப் பள்ளி.1956. குறிப்பு: இந்த இருபத் தொரு தொகுதிகளுள் சிலவற்றை புதுச்சேரி அரசு ஆசிரியர் பயிற்சி மைய நூலகத்தில் கண்டு குறிப்பு எடுத்துக் கொண்டேன். மற்ற தொகுதிகளை, 1971ஆம்