பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 தமிழ்நூல் தொகுப்புக் கலை தோத்திரக் கொத்து இது சிதம்பரம் மெளன குருஞான தேசிகர் மீது திரு வண்ணாமலை ஈசானிய ஞான தேசிகர் இயற்றிய சிறு நூல் களின் கொத்து. வெ-மெளன தேசிகர் மடாலயம், சிதம்பரம். கந்தன் பிரஸ், சிதம்பரம். 1940. உ - மாகேசுரபூசைத் தோத் திரம், குருமரபு வாழ்த்து, பஞ்சரத்தினம், சிகாமணிப் பதிகம் ஆகியவற்றின் தொகுப்பு. தத்துவ ராய சுவாமிகள் அடங்கல் முதல் பக்கம் கிழிந்துள்ளதால், தொகுத்தவர் பெயர், அச்சகம், காலம் முதலியன தெரியவில்லை. சென்னைப் பதிப்பு என்பது மட்டும் தெரிகிறது. இந்த அடங்கலில் (திரட்டில்) உள்ள நூல்களாவன: திருத்தாலாட்டு, பிள்ளைத் திருநாமம், வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி, சின்ன பூ வெண்பா, தசாங்கம், இரட்டை மணி மாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலை, கலிப்பா, ஞான வினோதன் கலம்பகம், உலா, சிலேடை உலா, நெஞ்சுவிடுதூது, கலிமடல், அஞ்ஞான வதைப் பரணி, மோக வதைப் பரணி, அமிர்த சார வெண்பா-ஆகிய 18 நூல்களின் திரட்டு இது. அருணகிரி நாதரின் படைவிட்டுத் திருப்புகழும் ஆண்டவன் பிச்சை இயற்றியவையும் வெளியீடு: பி.டி. பாணி கம்பெனி, சென்னை - 5. உள்ளுறை: திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், பழநி, திரு வேரகம், திருத்தணிகை, சோலைமலை, மதுரை, விராலிமலை, வயலூர், திருவானைக்கா, திருச்சிராப் பள்ளி-ஆகிய திருப்பதி ಹಣೆ மீது அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள் உள்ளன. மற்றும், ஆண்டவன் பிச்சை என்பவர் இப்பதிகளின் மீது இயற்றிய பதிகங்களும் படை வீட்டுக் கீர்த்தனப் பாடல் களும் இதில் உள்ளன. சாந்தோபதேச மஞ்சரி தொகுப்பு: வி.சே. ஆறுமுக முதலியார், நால்வர் பவனம், பெங்களுர், பெங்களுர்த் தண்டு. இவர்தம் குருநாதன் சாத்தா