பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சுந்தர சண்முகனார்


கரும்பு, சர்க்கரை, இனிமை என்ற பொருள்கள் உண்டு. அதாவது, கன்னல் தமிழ் என்றால், கரும்புபோல் இனிக்கும் தமிழ் என்பது பொருளாம். தஞ்சைவாணன் - கோவை ஆசிரியர் பொய்யா மொழிப் புலவர்,

“தேருந்தொறும் இனிதாம் செந்தமிழ்”

என்றார். மாணிக்க வாசகர் திருக்கோவையாரில்

“உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழ்”

என்றார். தீந்தமிழ் = தித்திப்பான தமிழ்.

தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு.

எனவே, தமிழுக்கும் தமக்கும் நெருக்கம் மிகுதி எனக் கவியரசர் கூறுகிறார். வானத்திற்கு வெண்ணிலாபோல வீரனுக்குக் கூர்வாள் போல-மலருக்கு மணம் போல-மகர யாழுக்கு இசைபோல-கண்ணுக்கு ஒளிபோல-என உவமைகளை அடுக்கி, கவிஞருக்குத் தமிழ். இன்றியமையாதது எனக் கருத்து கொள்ளலாகாது. இந்த உவமைகளை அடுக்கி, இவற்றைப்போல, தமிழுக்குக் கவியரசர் இன்றி மையாதவர் எனக் கருத்து கொள்ளல் வேண்டும். அந்த அளவுக்குக் கவிஞர், தமிழின் பெருமைகளை, விளக்கிப் பல சிறந்த தமிழ் நூல்களைப் படைத்துத் தமிழை வளர்த்து உள்ளார். கன்னல் தமிழும் கவியரசர் புகழும் வாழ்க. 

9. பகைவரை மயக்கிய பாவேந்தர்

1. வாழ்க்கைக் குறிப்புகள்

பாவேந்தர் பாரதிதாசனாரைப் பற்றிக் கட்டுரை எழுதுபவர்கள், அவருடைய பாடல்களில் உள்ள சிறப்பை எடுத்துக்காட்டியே கட்டுரை எழுதுவார்கள். அவரோடு பல்லாண்டு காலம் நெருங்கிப் பழகியவன். அவர் தொடர்