பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

227


பேராட்சியாக (பிரதிநிதியாக) ஆக்கப் பெற்றது. போய், ஆய், உடீஇ, நிலைஇ என்பன சிறு வரவினவாதலின் வாய்பாடு சொல்லப்படவில்லை. 

23. மெய்ப்பாடு-ஓர் அறிமுகம்

“மங்கை ஒருத்தி தரும் சுகமும்
எங்கள் மாதமிழ்க்கு ஈடில்லை” (பாரதிதாசன்)

“தேருந்தொறும் இனிதாம் தமிழ்போன்று
இவள் செங்கனிவாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம்
என தாருயிர்க்கே”
(தஞ்சை வாணன் கோவை-பொய்யாமொழிப் புலவர்)

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு”(குறள் - 783)

“Who entertains the harmless day
with a well – chosen book or a friend”
(Charaeter of The Happy Life by Henry Wotten)

மேற்காட்டியுள்ள பாடல்கள் இலக்கிய இன்பச் சுவையின் சிறப்பினை விளக்குகின்றன. தேர்ந்த இலக்கியப் படைப்பாளர்கள், எந்தச் செயலையும் கலை நயம்பெறக் கூறுவதில் வல்லவர்கள். மகிழ்ச்சிக்கு உரிய செயல் மட்டுமன்று; துன்பத்திற்கு உரிய நிகழ்ச்சியாயினும் அதனைச் சுவைமிக விளக்குவர், எடுத்துக்காட்டுகள் சில காண்போமே:-

அகவை மிகவும் முதிர்த்த முதியவள் ஒருத்தி தன் வாழ்நாளைப் பழிக்கிறாள். நான் இவ்வளவு நாள் வாழ்ந்து