பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மனத்தின் தோற்றம்



கொடிகளை முளைக்கச் செய்பவன் - என்பதாக இறைவனின் சிறப்புமிக்க சித்து விளையாடல்கள் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எனவே, இந்தத் தேவாரப் பகுதிக்கும் மாணிக்கவாசகர் பற்றிய கதைக்கும் இங்கே தொடர்டே யில்லை. தமிழறிஞர் எம். சீநிவாச ஐயங்கார் தமிழாராய்ச்சி' என்னும் தமது நூலில், நரியரியாக்கிய கதை தமிழகத்தில் பண்டு தொட்டு வழங்கி வருவது; அதற்கும் பாணிக்க வாசகருக்கும் தொடர்பில்லை - என்பதாகக் கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, மணிவாசகர், தேவார ஆசிரியர் மூவருக்கும் பிற்பட்டவர் - பத்தாம் நூற்றாண்டினர் என்பது போதரும்.

இதற்கு இன்னும் கூரான சான்று ஒன்று கொடுக்க முடியும். நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப்பெரியார், தமது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்னும் நூலில், திருவாதவூரர் என்னும் இயற்பெயருடைய மாணிக்க வாசகரையும் அவர் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையை யும் பற்றி,

“வருவா சகத்தினில் முற்றுணர்க்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத ஆர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே” (58)

என்னும் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். நம்பி யாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பது, அனைவரும் எளிதில் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. எனவே, அவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது