பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

585

ចំ៦ செருந்தி மலர, நோதக வந்தன்றால் இளவேனில்' என நல்லந்துவனார் இளவேனிலைக் காட்டினார். நல்லூர் நத்தத்தனார் இதனைத் 'தலைநாட் செருந்தி’ என்றார். ஆண்டின் ஆறு பருவங்களில் இளவேனில் பருவம் முதற்பருவமாம் தலைப் பருவம். இப்பருவத் தில் மலர்வது செருந்தி. குறுவழுதியார் என்பார், 'தனைத்து செருந்திப் போதுவாய் அவிழ மாலை மணி யிதழ் கூம்பக் காலை கள் நாறு காவியொடு தண்ணென மலரும்'2 - என இது காலைப் பொழுதில் மலர்வதைக் குறித்தார். எனவே, செருந்தி இளவேனிற் பருவத்தில் காலைப் போதில் மலரும் பூ. - - அரும்பலர் செருந்தி நெடுங்கால் மலர்' எனும் அவ்வையார் பாடல் இப்பூவின் காம்பு நீண்டிருப்பதைக் காட்டு கின்றது. 'வண்டுபட விரிந்த செருந்தி' என்னும் தொடர் இம் மலர் நன்கு விரிந்து மலர்வதைக் குறிக்கின்றது. இவ்வாறு நீண்ட தாம்பில் நன்கு விரிந்த மலரை நல்லந்துவனார் கண்டார். மருண்டுபோனார், ஏன்? 'செருந்தியா பொன்னா' என மருண் டார். அவ்வுணர்வில், 'தலை நாட் செருந்தி தமனியம் மருட்ட" என்று பாடினார் ஆம், இதன் நிறம் பொன் நிறமாம் மஞ்சள் நிறம். அம்மூவனார் அதன் இதழ்களைக் கண்டு, "பொன் அடர்ந்தன்ன ஒள்ளிணர்ச் செருந்தி" 6 -என்றார், இங்கு அடர்தல் தகடாதல். 'பொன் அடர்ந்தன்ன என்பதற்குப் பொன் தகடானதுபோன்று’ என்று பொருள். செருந்திப் பூவின் இதழ் பொன் தகடுபோன்றது. இதனால் இதனைப் 'பொன்தகட்டு மலர்' எனலாம். இப்பூ வீயாகி விழும் காட்சியைத் திருநெல்வேலியிற் கண்ட ஞானசம்பந்தர், 'செருந்தி பொன் மலர் திருநெல்வேலி" என்று பொன் மலராகப் பாடினார். அவரே சாய்க்காட்டில் பார்த்து, 1. கலி : 26 : 8, 5 சிறுபான் : 147. 2 அகம் : 1.56 : 8:10, 6 அகம் : 280 : 1. 3 புறம் , 390 8. 7. ஞான, தே திருநெல் :1 4 அகம் : 240 : 12, 13, r -