பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் ஓடிய
இட்லர்!


ஒலிம்பிக்கில் ஒடுவது என்றால் புகழுக்காக என்பது நமக்குத் தெரியும். வெட்கப்பட்டுக் கொண்டு ஓடினர் ஒருவர் என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!

1936ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் ஒலிம்பிக் பந்தயம் நடைபெற இருந்தது. ஆகஸ்டு 1ம் தேதி போட்டிகளைத் தொடங்கி வைத்தவன் இட்லர் தான். கம்பீரமாக பீரங்கிகள் முழங்கின. சமாதானமான தூதுவர்களாக மூவாயிரம் வெண்புறாக்கள் வானிலே பறக்கவிடப்பட்டன.

முதல் போட்டி குண்டெறியும் போட்டி (Shot put). வெற்றி பெற்றவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஹேன்ஸ் உல்க் என்பவர். 1896ம் ஆண்டிலிருந்து ஒரு முறைகூட ஜெர்மனி தங்கப் பதக்கம் ஒன்று கூட வாங்கவில்லை. முதல் முறையாக வெற்றி பெற்றதும், இட்லருக்கும் அவரது கும்பலுக்கும் தலைகால் புரியவில்லை.

“உலகத்தில் எல்லா இனங்களிலும் எங்கள் ஆரிய இனமே உயர்ந்தது. வலிமை மிக்கது. எல்லா ஒலிம்பிக்