பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈8 எஸ். நவராஜ் செல்லையா

37 முறை அந்த உயரத்தைத் தாண்டிய ஆற்றல் மிகு வீரன் நெஞ்சில், அச்சமும் அதிர்ச்சியும் புகுந்து கொண்டு கால்களைத் தள்ளாடச் செய்தன. முதல் வா ய் ப் பி ல் தாண்ட முடியாது வீழ்ந்தான் தாமஸ். இரண்டாம் முறை யும் வீழ்ந்தான். அடக்கி வைத்திருந்த ஆற்றலையும், ஆத்தி ரத்தையும், சேர்த்துக் கொண்டு தாண்டியபோதும், பாவம், அவனுல் முடியவில்லை. உலக மாவீரன், புதிய சாதனையைப் பொறித்திருந்த பெரும் வீரன், தங்கப் பதக்கம் பெறும் தகுதியை இழந்தான். மூன்றும் இடத்தைப்பெற்று,வெங்கலப் பதக்கம் பெறும் நிலையில், வம்மிக் கொண்டே அவ்விடத்தை

விட்டு வெளியேறினன்.

தாங்க முடியாத அவமானத்தால், தான் எதிர்பார்த் திராத தோல்விச் சுமையால், தலைகுனிந்தவாறு சென்ருன் தாமஸ். ஆற்றல் இருந்தது. அனுபவம் போதவில்லை’ என்று வல்லுநர்கள் அவனைப் பற்றி விமரிசித்தனர். அனுபவத்தில் முதிர்ச்சியடையாத தாமஸ், 1964-ம் ஆண்டு டோக்கியோ விற்கும் பங்குபெறச்சென்ருன்.

தோல்வித் துயரம் அங்கேயும் தொடர்ந்தது. துணிவும் திறமும் தொடர்ந்து கைவரப் பெருத காரணத்தால், இரண்டாம் இடத்திற்கு வந்து வெள்ளிப் பதக்கத்தைத் தான் அடைய முடிந்தது. ஆனால், 1960ம் ஆண்டு இரண்டு ரஷ்யர்களில் ஒருவகை இருந்த வேலரி புரூமல் (Walery Brumel), இரண்டாம் இடத்தை வென்று, 1964ம் ஆண்டு தடந்த போட்டியில் தங்கப் ப த க் க த் ைத வென்முன், ஆமாம்! அவனும் சரித்திரநாயகனக மிளிர்ந்து விட்டான்.

தைரிய புருஷனுக விளங்கிய புரூமல் 7 அடி 13 அங்குலம் தாண்டி ஒலிம்பிக் சாதனையைப் பொறித்தான். தொடர்ந் தாற் போல் தைரியத்தை இழந்த தாமஸ், அதே உயரம் தாண்டிய போதிலும், இரண்டாவது இடத்தையே பெற முடிந்தது.

தொட்ட காரியத்தைத் துணிச்சலுடன் தொடர்ந்த