பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

85

சட்டப்படி அந்த வீரனை ஓட்டப்போட்டியிலிருந்து நீக்கி விட வேண்டாமா? என்பதுதான் பார்வையாளர்களின் குரல்களாக ஒலித்தன. அப்பொழுது ஓர் அறிவிப்பு ஆங்கே எழுந்தது. மகுடி கேட்ட நாகமென மக்கள் கூட்டம் அமர்ந்தது. அப்படியென்ன ஆட்களை மடக்கும், அடக்கும் அறிவிப்பு அது!

‘வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் வீரன் நமது விருந்தினன்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. விருந்தினரை மதிக்கும் நாட்டினர், விருந்தினர் என்றதும் வெறுப்பை உதறி விட்டுவிட்டு, அவன் பெற்ற சிறப்புக்காகப் பாராட்டிக் கை தட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கிடையில் லாரியும், ரால்ப்கில்லும் ஓடிய நிகழ்ச்சியைப் படம்போட்டுக் காட்ட, அதை லாரிபார்க்க வேண்டிய வாய்ப்பும் கிட்டியது. அதில், தான் ரால்ப்கில்லை எவ்வாறு முன்னே ஓடவிடாமல் தடுத்திருக்கிறோம் என்பதைப் பார்த்தவுடன், லாரிக்கும் வெட்கம் மேலிட வேதனை மிகுதியாயிற்று. தவறாக நடந்துகொண்டது பற்றி வேதனை மீறிட, தனக்கு அவ்வாறு பெற்ற தங்கப்பதக்கம் வேண்டாமென்று கூறும் நிலைமையில் லாரி வந்துவிடவே, தன்னை மீறிய களைப்பில் நேர்ந்த தவறை நினைத்து மிகவும் வருந்தினான். ‘வேறு எங்கிருந்தும் அதற்கான எதிர்ப்பு வரவில்லை’ என்றதால் லாரியின் கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

பிறகு, பதக்கம் பரிசளிக்கும் விழா நடைபெற்ற போது, முதலாவது இடத்தில் நின்ற லாரி, இரண்டாம் இடத்தில் கின்ற ரால்ப்கில்லை அழைத்துத் தன்னுடன் வந்து மேலே நிற்குமாறு அழைத்தபோது, ரால்ப் ஏறி