பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: மெய், வாய், கண், மூக்குச் , செவி யென்னும் பொறிகள் வழியாக ஐந்துவாயிலையும் அறுத்தானது; மெய்யான ஒழுக்க நெறியின் கண் வழுவாது நின்றார். பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். بلي தற்கால உரை: பொறிவாயில் ஐந்தும் ஒழித்தவனது, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் - குற்றமற்ற நெறியின் கண் (நிலையாது) நின்றவர், நீடு வாழ்வார். புதிய உரை: எழும்பிய பொறியின் வாயிலை அணைத்து என்பதைவிட பொறி எழும்பாமலேயே அவற்றின்வாசலை அவித்து, பிறருக்காகப் போலியாக வாழாமல் தனக்காகவே ஒழுக்கம் சான்ற வழியிலே வாழ்கின்றவர், பெருகிடும் செழிப்பில் மேம்பாடுகள் நிலைத்திட வாழ்வார். விளக்கம்: வாயில் அவித்தான் என்பதில்தான் குருவின் பெருமை கனகமணிக் குவியலாகக் கருதப் படுகிறது. கூறப்படுகிறது. அவித்தல் என்றால், மீண்டும் தீயே இல்லாதவாறு செய்து விடுவதாகும். அவித்தல் = அணைத்தல், அழித்தல், நீக்குதல் என்று அர்த்தம். ஐம்புலன்களாகிய செவி, மெய், கண், வாய், மூக்கு இவற்றினால் உண்டாகும் தன்மைகள். ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் இவ்வைந்தும் கவர்ச்சியால் எழுச்சி பெற்றுக் கட்டுக்கடங்காத ஆசைகளைக் கரை கடக்க விட்டு நிறை தகுதியை அழித்துப் பொசுக்கும் அபாயங்களாகும். நீடு - என்பதை நீண்ட காலம் என்பதை விட செழித்தல், பெருகுதல், மேம்படுதல் என்றுள்ள பொருள்களுடன் பொருத்த வேண்டும். நின்றார் என்பது நிலையாகத் தடுமாற்றம் இல்லாது. இந்த 6 வது குறள் மூலமாக, குருவிடமிருந்து பெறுகிற திருவினைகள் மூலமாகப் பெறுகிற புறப்பயனை விளக்குகிறார் வள்ளுவர். குருவழி சென்றவர் திருவழி நின்றவர் குலம் தழைக்கும், பெயர் நிலைக்கும் என்பதை இங்கே குறித்துக் காட்டுகிறார்.