பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 635 (2) கரவாது இடுதல் வேண்டும் . ஏன் எனில் 'கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியான் இறைவன் - அப்பர் 4.7.1. தானமென்றும் இடுங்கோள் - கந்தரலங்காரம் 16. தானம் இடும்போது இறைவனைக் குறித்த சிந்தனையும் வேண்டும் . கந்தரலங்காரம் 66 கீழ்க்குறிப்பு பக்கம் 65 பார்க்க. ഷ് 28-ன் குறிப்பையும் பார்க்க-தொகுதி 6, பக்கம் 176. "பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈ யாயினும் க்யார் . நரகத்தில் நிற்றிரோ" - திரும்ந்திரம் 264. 8. மையல் நீங்க உபதேசம் பெற்றது பதிகேள் அகமாம் எனுமிப் ரிiமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம்பொரு தானவ நாசகனே. (அந்) குமரன்...நாசகன் அமரும்பதி.பேசியவா. (பொ.உ) குமாரமூர்த்தி, இமயமலை அரசனது மகள் - ஆகிய பார்வதியின் மகன், (சமரம்பொரு போர் புரிந்த (தானவர் நாசகன்) அசுரர்களை வதம் செய்தவன்.ஆகிய முருகவேள் (அமரும்பதி) யான் வசிக்கும் ஊர், (கேள்) உறவினர், (அகம்) வீடு (அல்லது நான்) ஆம் எனும் - என்று சொல்லப்படுகின்ற (இப் பிமரம்) இந்த மய்க்க அறிவு (கெட்) ஒழிந்து போம்படி (மெய்ப்பொருள்) உண்மைப் பொருளை எனக்கப் (பேசியவா) உபதேசித்த விசித்திரம் ஆச்சரியகரமாயிருக்கின்றது. (சு-உ) முருகவேளின் உபதேசச் சிறப்பே சிறப்பு: அது சக மாயையை அறவே ஒழித்து விட்டது. (கு.உ) (1) இச் செய்யுள் அருணகிரியார் உபதேசம் பெற்ற வரலாற்றைக் குறிக்கின்றது. முருகவேள் உபதேசித்தவுடன் கேள், அகம் எனும் இம்மயக்கம் நீங்கிஒழிந்தது. இதை இல்லே எனுமாயை' என்றார் 29ஆம் பாடலில்,