பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334


"கருங்கால் வேம்பின்” (குறுந் : 24 : 1) கருஞ்சினை வேம்பும்’ (புறம் : 338 : 5) "கருஞ்சினை விறல்வேம்பு' (பதிற்:49:16)-என்பவற்றிற் கேற்ப வேம்பின் அடிமரமும், கிளைகளும் கருமை நிறங் கொண்டவை. மேற்பட்டையின் நிறம் கருமை. இவ்வாறு அடிமரத்த்ாலும் கிளைகளாலும் கருவேம்பு எனப்பெயர் பெற்றது. இதற்கு நிம்பம், பிசிதம் என்னும் மாற்றுப் பெயர்களை நிகண்டு கள் கூறுகின்றன. இக்கருவேம்பைக் குறிப்பதே விடுகதை. இதில் 'கத்திபோல் இலையிருக்கும்." இலை ஒரம் பற்கள் அமைந்த கத்தி போன்றது. அஃதாவது பற்கள் உள்ள அரத்தின் வாய் போன்றது. "அரவாய் வேம்பின் அங்குழைப் பொருநர் (பொருந் : 144.) அரவாய்க் கடிப்பகை (வேம்பு) (மணி : 7 : 73) அரம் நிகர் இலை திம்பம் (திருவிளை : அன்னக்குழி : 21 : 1) என்றெல்லாம் இவ்விலையின் ஒரம் சுட்டப்பட்டது, நல்ல பசுமை நிறமுள்ளது. வேம்பு என்றாலே கைப்புச் சுவை-கசப்புச் சுவை நினைவில் எழும். இக்கசப்பு நன்மை தருவது. தின்னாத காயைக் காய்க்கும் வேம்பு 'தின்னப் பழம் பழுக்கும்'. வாவல், கிளி முதலிய பறவைகள் விரும்பி உண்ணும் ஒரு பசுங்கிளி தன் சிவந்த அலகில் மஞ்சள் நிற வேப்பம் பழத்தைத் தின்னக் கவ்வியுள்ளது. இவ்வாறு, “... ... ... ... ... ... ... ...கிள்ளை வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழ'1 த்திற்கு உவமை சொன்னார் அள்ளும் நன் முல்லையார். புதிய பொன் கம்பியில் நுழைப்பதற்காக ஒரு பொன் காசைச் சிவந்த விரல் நகத்தால் பிடித்திருப்பது போன்று இருந்ததாம். கூர்மையாக வளைந்து சிவந்துள்ள கிளியின் மூக்கிற்குவளைந்து செம்மை நிறம் ஏற்றப்பட்ட கூர்மையான நகம்: மஞ்சள் நிற வேப்பம் பழத்திற்கு 1 குறுந் : 67 : 1, 4