பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எஸ். நவராஜ் செல்லையா

மூன்ருவது போட்டி 3.45க்கு. 220 மகஜ ஓட்டப் போட்டி. அவன் ஒடி முடித்த நேரம் 20.3 வினாடிகள். அது வும் உலக சாதனைதான்.

நான்காவது போட்டி 4.00 மணிக்கு நடந்தது. தடை தாண்டி ஒடும் போட்டி. 220 கெஜ ஒட்டத்தில் 22.6 விடிைகளில் ஒடி, அதுவும் உலக சாதனையாக ஆக்கினன் அந்த மாவீரன்.

ஒரு மணி நேரத்திற்குள்ளாக, மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தி, நான்காவது போட்டியில் உலக சாதனைக்கு இணையாக நிகழ்த்திய அந்த மாவீரன், போட்டிகள் முடிந்த பிறகு, நடந்து செல்லவில்லை. அவனைத் தூக்கிக் கொண்டு தான் சென்ருர்கள். திண்மை நிறைந்த நெஞ்சின் முன்னே நிற்கப் பயந்து ஒடி ஒளிந்த வலியும் வேதனையும், போட்டிகள் முடிந்த பிறகு வந்து சூழ்ந்து கொண்டன. உலகம் அவனைப் பாராட்டிய பொழுது அவன் மரண வேதனைக்குள் அமிழ்ந்து கிடந்தான்.

பிறகு, கொஞ்சங் கொஞ்சமாக முதுகு வலி குறையத் தொடங்கியது. கலிபோர்னியாவில் ஒரு டாக்டர் மேற் கொண்ட தீவிர சிகிச்சையின் காரணமாக, ஒவன்சின் முதுகு வலி மறைந்தது. அடுத்து வந்த ஒலிம்பிக் பந்தயம் அவனை மேலும் பலம் உள்ளவகை மாற்றிவைத்தது. அ த ற் கு ம் காரணம் இருக்கத்தான் இருந்தது.

1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் பந்தயங்கள் ஏ ற் பா டு ஆகியிருந்தன. சர்வாதிகாரி இட்லரின் கீழ் அப்பொழுது ஜெர்மனி அ ட ங் கி க் கிடந்த நேரம்! தனது ஆரிய இனமே ஆற்றல் மிக்க இனம் என்று இட்லர் வெறியோடு பேசிக்கொண்டு உலகத்திலே வெல்லக்கூடிய ஆற்றல் தனது வீரர்களுக்கு மட்டுந்தான் உண்டு என்று கர்வத்துடன் கர்ஜித்த நேரம். அமெரிக்கா நீக்ரோ வீரர்கள் அனைவரும் தோல்வியடைவார்கள்’ என்று சோதிடம் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், டான் புயல் என்று விளையாட்டுத் துறை எழுத்தாளர்களால் வருணிக்கப்பட்ட ஜெசி ஒவன்ஸ்