பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

27


புலவர்கள், அவை நடைபெற்ற ஆண்டுகள், ஆதரித்த அரசர்கள் ஆகியோரின் கற்பனைக்கெட்ட எண்ணிக்கை ஆகும்.

களவியலுரை கூறும் கற்பனைகளை ஒதுக்கி வரலாற்றுக் கண்கொண்டு நோக்குவோமாயின், கீழ்வருகின்ற முடிபுக்கே வருவோம். கி.பி. 200க்கு முன்னே பல சங்கங்கள் பல்வேறு காலங்களிலே இருந்து தமிழ்மொழியிலே எண்ணற்ற இலக்கண, இலக்கியங்களை இயற்றிச் செந்தமிழைச் செழுந்தமிழாகச் செய்திருக்கின்றன. பொய்ம்மையும், கற்பனையும், இடைச்செருகலும் நிறைந்த பாரதம், இராமகதை, விஷ்ணு புராணம், வாயு புராணம், வேதங்கள் ஆகியனவற்றையே வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளும்போது, அவை எவையும் இல்லாத சங்க இலக்கியங்களை வரலாற்றுக்கு அடிப்படையாகக் கொள்ளல் தவறாமோ?

தொல்காப்பியர் காலத் தமிழகம்

அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலே தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களிலே பழமைச் சிறப்புடையது தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் ஒரு பல்கலைக் களஞ்சியமாகும். அந்நூல் ஒரு பொன்னூல், அது இலக்கண நூல் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் மக்களின் செவ்விய வாழ்க்கையைக் காட்டும் நன்னூலுமாகும். இதனது பெயரும், இது இடைச் சங்ககால நூல் என்பதும் இந்நூலின் தொன்மையை நன்கு விளக்குகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் விரித்துக்கூறும் சிறப்புடைய ஒரே பழைய நூல் தொல்காப்பியமே இதனை,