பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்லவப் பேரரசு

69


சைவனான மகேந்திரவர்மன் வடஆர்க்காட்டுப் பாடலிபுத்திரம் என்ற ஊரில் உள்ள சமணக் கோவிலை அழித்து சிவன் கோவில் கட்டினான், முதன் முதலில் கற்கோவிலை ஏற்படுத்தியவன் இவனே. வல்லம், செங்கல்பட்டு, தளவனூர், மகேந்திரவாடி ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் சிவன் கோவிலையும் விட்டுணு கோவிலையும் கட்டினான். மண்டபப் பட்டுக்கல்வெட்டு இவன் செங்கல், மரம், உலோகம், சாந்து இன்றிக் கோவில் கட்டுவித்தான் எனக் கூறுகிறது. சித்திரக்காரப் புலி என்னும் பட்டப் பெயரால் மகேந்திரவர்மனின் ஓவியப் புலமை விளங்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியம் இவனால் அமைக்கப்பட்டதே. இவற்றிலிருந்து இவன் இசை, நாடகம் முதலிய கலைகளைப் புரந்தமை நன்கு புலனாகும். சுருங்க உரைப்பின் மகேந்திரவர்மன் சாளுக்கியரை முறியடித்தான் ; சைவத்தை வளர்த்தான் ; கலைகளை ஆதரித்தான் ; கற்கோவில்களைக் கட்டுவித்தான்; வேளாண்மையைப் பெரிதும் விரிவாக்கினான்.

நரசிம்மவர்மப் பல்லவன் (630-655)

இவன் மகேந்திரவர்மப் பல்லவனின் மகன். இவன் இளவரசனாக இருந்தபோது போர் பல செய்திருக்கிறான். மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை இவன் மூன்றிடங்களில் தொடர்ந்து முறியடித்து உள்ளான். அதுமட்டுமல்ல; வாதாபி வரை சாளுக்கியனை விரட்டிச் சென்று அந்நகரை அழித்து வெற்றித்தூண் நிறுவியவனும் இந் நரசிம்மனே. இந்நிகழ்ச்சி கி. பி. 642ல் நடந்தது. அதனால் வாதாபி கொண்டவன் என்ற விருதுப்பெயரும் கொண்டான். இவன் படைத்தளபதி பரஞ்சோதி; இவரே சேக்கிழாரால் சிறுத்தொண்ட நாயனார் எனப் பாராட்டப்பட்டவர். இவர்கால மற்றொரு நாயனார் ஞானசம்பந்தர் ஆவார். நரசிம்மன் நடத்திய போரில் இலங்கை மன்னனான மான