பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 49 உலகுக்குத் தரமும், தண்மைமிகு ஒளியும், தகுதிசான்ற திறமும் பெருகி வருகிறது. உள்ளும் புறமும் என்பது மனத்தின் பல மாய் மாலங்கள். புறத்தின் ஐம்புலக் கூறுபாடுகள். இவற்றை வெல்ல வேண்டும் என்பதற்காக விரைந்து துறப்பதும் அதிலே நிறைந்து நிற்பதும் தான் நீத்தாரின் பெருமை என்கிறார் வள்ளுவர். இப்பண்புதான் நீத்தாரை உலகோர் முன் நிலை நிறுத்திக் காட்டுகிறது. 24. உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து பொருள் விளக்கம்: உரன் என்னும் = உடல் வலிமையும் திண்மையும் தோட்டியான் = தீயவைகளை அகற்றித் தூய்மைப்படுத்துகிற ஒர்வித்து = ஒப்பற்ற ஞானமாகத் திகழ்வதால் ஒர் ஐந்தும் = உடல் சிறப்புப் புலன்கள் ஐந்தையும் காப்பான் = புலன் இழுக்கங்களிலிருந்து காப்பாற்றி வரன் என்னும் = மேன்மை பயக்கக் கூடிய வைப்பில் = காப்பிடமாகக் காத்து நிற்கிறது வித்து அறிவூட்டுகிறது சொல் விளக்கம் : உரன் = அறிவு, பலம், திண்மை, வலிமை தோட்டி = சுத்தம் செய்பவன், தீயவை அகற்றுபவன் வைப்பு = காப்பிடம்; வித்து அறிதல். வித்திலிருந்து தான் வேதம் என்னும் சொல் பிறந்திருக்கிறது. முற்கால உரை: திண்மை என்னும் தோட்டியால் பொறிகளாகிய யானைகள் ஐந்தினையும் தத்தம் புலன்மேல் செல்லாமல் காப்பான் எல்லா உலகத்தினும் மிக்கதென்று சொல்லப்படும வீட்டு நிலத்திற்கு ஒரு வித்தாம். தற்கால உரை: அறிவு என்னும் துறட்டினால் பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் அடக்கிக் காப்பவன், ஆக்கம் என்னும் களஞ்சியத்தை நிரப்பும் ஒப்பற்ற நல்ல மணிகளைத்தரும் பொறுக்குமணி ஆவன்.